ராமேஸ்வரத்தில் வார விடுமுறையில் ஆயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள்... முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து வழிபாடு
ராமேஸ்வரத்தில் வார விடுமுறையில் ஆயிரக்கணக்கில் கூடிய பக்தர்கள்... முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து வழிபாடு
இராமநாத சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம்
Arulmigu Ramanathaswamy Temple | சுவாமி தரிசனம் காண வந்த பக்தர்கள் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள தனுஷ்கோடி, ராமர் பாதம், கலாம் நினைவகம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
வார விடுமுறையையொட்டி ராமேஸ்வரத்தில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் ஓலி பெருக்கி மூலம் அறிவுறுத்தபட்டது.
ராமநாதபுரம் ராமேஸ்வரம் உலக பிரசித்தி பெற்ற முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்று என்பதால், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கானோர் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவு வருகை தருவது வழக்கம். இந்நிலையில் இன்று ஞாயிற்றுகிழமை வார விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் வந்தனர்.
சுற்றுலா பயணிகள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோர்களுக்கு எள்ளு பிண்டம் வைத்து பூஜை செய்த பின்னர் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி திருக்கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
பின்னர் ராமேஸ்வரத்தை சுற்றியுள்ள தனுஷ்கோடி, ராமர் பாதம், கலாம் நினைவகம், பாம்பன் பாலம் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு பின்னர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.
வழக்கத்தை விட அதிகமான சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரம் வந்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை பின்பற்றி பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் ராமேஸ்வரத்தை சுற்றிப் பார்க்கவும், சுவாமி தரிசனம் செய்யவும் ராமேஸ்வரம் நகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளதையடுத்து திருக்கோவில் ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ராமேஸ்வரம் வந்துள்ள பக்தர்களை கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தினர். முக்கிய இடங்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க சீருடை அணியாத காவலர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
செய்தியாளர் : சேது குமரன்
Published by:Sankaravadivoo G
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.