ராமநாதபுரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் மதுரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எட்டிவயல் கிராமத்தில், தரணி முருகேசன் என்பவர் 60 ஏக்கர் நிலத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார். விவசாயத்துடன், விவசாயிகளின் நண்பர்கள் எனப்படும் நாட்டுக்கோழிகள், மாடுகளையும் வளர்த்து ஒருங்கிணைந்த பண்ணையையும் அமைத்து வியக்க வைத்துள்ளார்.
மேலும்
பழவகைகள், மரங்கள், மூலிகைகள் என அனைத்திலும் மக்களுக்கு பயன்தரும் பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார். மொத்தமுள்ள 60 ஏக்கர் நிலத்தில் 20 ஏக்கர் வேளாண் காடுகளுக்கும், 20 ஏக்கரில் கோழி, மாட்டுப்பண்ணையும், மீதமுள்ள 20 ஏக்கரில் பயிர்களும் வைத்துள்ளார். இதில் கோடையிலும் வறண்டுபோகாத வகையில் ஆண்டு முழுக்க பயன்தரும் 7 குளங்களும் அடங்கும்.

தரணி முருகேசன்
வறட்சியான நிலத்திலும் ஒருங்கிணைந்த பண்ணையை நடத்தி வரும் தரணியிடம் நுணுக்கங்களை கற்க
வேளாண் கல்லூரி மாணவர்களும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் வந்து பயிற்சி பெறுகின்றனர்.
மேலும் படிக்க...
WFH | உடல் பருமன், நீரிழிவு நோய் வராமல் தடுப்பது எப்படி?
தமிழகத்தின் பாரம்பரிய நெல் வகைகளான அறுபதாங்குறுவை, கருத்தக்கார், பூங்கார், சித்திரைக்கார், மாப்பிள்ளைச் சம்பா, கிச்சடிச் சம்பா, ஆத்தூர் கிச்சடிச் சம்பா போன்ற நெல் வகைகளை பயிரிட்டுள்ளார். இதில் குறைந்த தண்ணீரிலும் 65 நாட்களில் மகசூல் தரக்கூடிய அறுபதாங்குறுவை நெல் தனிச்சிறப்பு வாய்ந்தது. இவ்வகை அரிசி பெண்களின் கர்ப்பப்பை பிரச்னைகளை தீர்ப்பதுடன், இயற்கை பிரசவத்துக்கும் உதவக்கூடியது. இயற்கையை துளியும் சேதப்படுத்தாமல், தற்சார்பு பொருளாதாரத்தை உருவாக்கி வரும் தரணி முருகேசன் பாராட்டுக்குறியவர்.
செய்தியாளர்: பொ.வீரக்குமரன், ராமநாதபுரம்
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.