'உள்ளாட்சியோ, ஊராட்சியோ இங்க இல்லை, எங்கேயுமே எங்க ஆட்சி தான்' என 90 கிட்ஸ் வைத்த பேனர் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களை கவரும் விதமாக வேட்பாளர்கள் வினோதமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அரசியல்வாதிகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பரமக்குடியில் இளைஞர்கள் சிலர் நண்பரின் திருமணத்துக்காக வைத்த பேனர் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. உள்ளாட்சியோ, ஊராட்சியோ இங்க இல்லை எங்கேயும் எங்க ஆட்சிதான் என்ற வாசகத்துடன் வாட்ஸ் அப்பில் வலம் வருகிறது இந்த வைரல் பேனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி எமனேஸ்வரம் பகுதியைச் சேரந்த நிதீஸ் குமார் - அகல்யா திருமண விழாவில் 90 கிட்ஸ் இளைஞர்கள் வைத்துள்ள பேனரில், “அமெரிக்க அதிபர், ஜெர்மன் அதிபர், இங்கிலாந்து அதிபர்,கனடா அதிபர் எங்களின் அன்பான அழைப்பை ஏற்று மணமக்களுக்கு வாழ்த்து கூறிய உலக தலைவர்களுக்கு நன்றி எனத் தெரிவித்துள்ளனர். மேலும் திருமணம் நடக்கும் இடம்;இங்க பக்கத்துல, நாள்: இன்னைக்குத்தான் என இந்திய மேப் வரைபடம் மூலமாக பேனர் வைத்து உள்ளார். இதனைப்பார்த்த பொதுமக்கள் சமூக வலைதளங்களில் இதனை பகிர்ந்து வருகின்றனர்.
செய்தியாளர்: கு.தமிழ்ச்செல்வன் (பரமக்குடி)
Published by:Ramprasath H
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.