• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தலைவர்கள் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் 9 வயது சிறுவன்

தலைவர்கள் படத்தை தலைகீழாக வரைந்து அசத்தும் 9 வயது சிறுவன்

Youtube Video

ராமநாதபுரம் அருகே 9 வயது சிறுவன் தலைவர்கள் மற்றும் மலர்களின் படங்களை தலைகீழாக வரைந்து அசத்தி வருகிறார். தேசிய, மாநில அளவிலான ஓவிய போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் சிறுவன் பெற்றுள்ளார்.

  • Share this:
    ராமநாதபுரம் கோட்டைமேடு பகுதியை சேர்ந்த ஜெகன் விஜய் - கிரிஜா தம்பதியின் 9 வயது மகன் அஸ்வா அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் 4 வயதிலே ஓவியங்களை பார்த்தவுடனே அதனை தத்ரூபமாக வரையும் ஆற்றல் கொண்டவராக இருந்துள்ளார். ஓவியம் மீது தீராத காதல் கொண்டதால் அவர், தனது தந்தை ஜெகன் விஜயிடம் ஓவிய பயிற்சி பள்ளியில் சேர்க்குமாறு கூறியுள்ளார்.

    மகனின் ஆர்வத்தை கண்டு வியப்படைந்த தந்தை ஜெகன், அஸ்வாவை ராமநாதபுரத்தில் உள்ள ஓவிய பயிற்சி பள்ளியில் சேர்த்துள்ளார். அதன் பலனாக அவர் தற்போது தமிழ் கவிஞர் பாரதியார், அன்னை தெரசா மற்றும் கடவுள் உருவங்களை தலைகீழாக வரைந்து அசத்தி வருகிறார்.

    தேசிய மற்றும் மாநில அளவிலான ஓவிய போட்டிகளில் பங்கேற்றுள்ள சிறுவன் அஸ்வா, ஓவியங்களை தலைகீழாக வரைந்து 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை குவித்துள்ளார்.

    தனது மகன் ஓவியம் மட்டுமின்றி கிட்டார் வாசித்தல், கேரம், பாட்மிண்டன், யோகா மற்றும் படிப்பு உள்ளிட்டவைகளிலும் சிறந்து விளங்குவதாக மகிழ்ச்சியுடன் கூறுகிறார் தந்தை ஜெகன் விஜய்.

    எதிர்காலத்தில் கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை போன்றுவர வேண்டும் என்பதுதான் தனது ஆசை என சிறுவன் அஸ்வா கூறியுள்ளார். சிறுவனின் கனவு நிறைவேற அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: