Home /News /tamil-nadu /

பரமக்குடியில் மயில் வேட்டையாடிய 4 பேர் கைது!

பரமக்குடியில் மயில் வேட்டையாடிய 4 பேர் கைது!

பரமக்குடியில் மயில் வேட்டையாடிய 4 பேர் கைது!

பரமக்குடியில் மயில் வேட்டையாடிய 4 பேர் கைது!

சமீப காலமாக தொடர்ந்து இப்பகுதியில் மயில்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது.

    பரமக்குடியில் மயில் வேட்டையாடிய 4 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி, நயினார்கோயில் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் மயில்கள் சுற்றி திரிகின்றன. இயற்கை உணவுகள் மற்றும் விளை நிலங்களில் விளையும் உணவுகளை உண்டு மயில்கள் வாழ்ந்து வருகின்றனர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    சமீப காலமாக தொடர்ந்து இப்பகுதியில் மயில்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து நயினார் கோவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாண்டியூர் பகுதியில் மயில் வேட்டையில் ஈடுபட்டிருந்த முதுகுளத்தூர் அருகிலுள்ள வீரம்பல் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமார், இயேசுதாஸ் உட்பட 4 பேரை கைது செய்து வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

    Also read: மர்ம நோய் தாக்கி 100க்கு மேற்பட்ட ஆடுகள் பலி - பீதியில் ஆடு வளர்ப்போர்!

    இதனையடுத்து வனசரகர் ஆறுமுகம் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தி நான்கு பேரை கைது செய்து மயில் இறைச்சிகளை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து, நால்வரையும்  பரமக்குடி நீதிமன்றத்தில் நீதிபதி கமலகண்ணன் முன்பு ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

    செய்தியாளர் - கு.தமிழ்ச்செல்வன்
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Ramanathapuram

    அடுத்த செய்தி