ஒருமாதமாக எந்த தகவல் தொடர்பும் இல்லை... குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற மகனை மீட்க தாய் கோரிக்கை

ஒருமாதமாக எந்த தகவல் தொடர்பும் இல்லை... குவைத் நாட்டிற்கு வேலைக்குச் சென்ற மகனை மீட்க தாய் கோரிக்கை
கருப்புசாமியின் தாய் மற்றும் மனைவி
  • News18
  • Last Updated: December 4, 2019, 5:57 PM IST
  • Share this:
குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்ற கருப்பசாமி என்பவரை மீட்டுத்தரக்கோரிஅவரது தாயாரும், மனைவியும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.டி. சேதுராஜபுரம் என்னும் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி, கடந்த 2014-ம் ஆண்டு குவைத்திற்கு ஓட்டுனர் பணிக்காக சென்றிருக்கிறார்.

தொடர்ந்து தொடர்பில் இருந்த அவர் கடந்த மாதம் கடைசியாக வீட்டிற்கு தொடர்பு கொண்டிருக்கிறார். அப்போது தனது பாஸ்போர்ட் காணாமல் போய்விட்டதாகவும், தன்னுடைய முதலாளி தகராறு செய்வதாகவும் கூறியிருக்கிறார். பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் புதுப்பித்துவிட்டு விரைவில் வீடு திரும்ப உள்ளதாகவும் கூறியிருக்கிறார்.


அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என குடும்பத்தார் கூறுகின்றனர். இதனால் கருப்பசாமியை உடனடியாக அரசு மீட்டுத்தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also see...
First published: December 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...