Home /News /tamil-nadu /

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10% EWS இடஒதுக்கீடை நீக்கியது பாமகவுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10% EWS இடஒதுக்கீடை நீக்கியது பாமகவுக்கு கிடைத்த வெற்றி - ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது பா.ம.கவுக்கு கிடைத்த வெற்றி என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், மத்திய அரசின் நிதியுதவியுடன் நடத்தப்படும் எம்.எஸ்சி- பயோ டெக்னாலஜி படிப்பில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினருக்கு 10% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இந்த அறிவிப்பை அந்த பல்கலைக்கழகம் பின்வாங்கியது.

    இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் அமைச்சர் பொன்முடி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ’மாநிலத்தில் செயல்படும் அனைத்து உயர்க்கல்வி நிறுவனங்களிலும் 69% இடஒதுக்கீடு முறை தான் பின்பற்றப்படும். மத்திய அரசு நிதியுதவியுடன் செயல்படும் பாடநெறிகளுக்கும் மாநில அரசின் இடஒதுக்கீடு முறையே பின்பற்ற வேண்டும் என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணை வேந்தருக்கு தெரிவிக்கப்பட்டது. 10% இடஒதுக்கீடு வழங்கும் உத்தரவும் திரும்பப் பெறபட்டுவிட்டது’ என்று தெரிவித்தார்.

    இந்தநிலையில், பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு அறிவிக்கப்பட்டிருந்த உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்கலைக்கழகம் அதன் தவறை திருத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. காமராசர் பல்கலைக்கழகத்தின் சமூக அநீதியை பாட்டாளி மக்கள் கட்சி தான் அம்பலப்படுத்தியது. எம்.எஸ்சி பயோடெக்னாலஜி படிப்புக்கு மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கை ரத்து செய்யப்பட்டு 69% இட ஒதுக்கீட்டுக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பது பாமகவுக்கு கிடைத்த வெற்றி!


    தமிழ்நாட்டின் பல பல்கலைக்கழகங்களில் ஆசிரியர்கள் நியமனத்திற்கான இட ஒதுக்கீட்டில் ரோஸ்டர் முறை செம்மையாக கடைபிடிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுப்பபடுகிறது. இது குறித்தும் அரசு ஆய்வு செய்து சமூகநீதியை நிலை நிறுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Dr Ramadoss

    அடுத்த செய்தி