• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என அறிவிக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

8-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என அறிவிக்க தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

பாமக நிறுவனர் ராமதாஸ்.

பாமக நிறுவனர் ராமதாஸ்.

தமிழகத்தில் இரு மொழிக் கல்வி கொள்கையே தொடரும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பதை பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்றுள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்றும்; புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை கொண்டு வந்துள்ளது வேதனையை அளிக்கிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படாது. இரு மொழிக் கொள்கையே தொடரும் என்று தமிழக முதலமைச்சர்
    அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாராட்டத்தக்கது.



    மும்மொழி கொள்கையை நிராகரிக்க தமிழக அரசு கூறியுள்ள அனைத்து காரணங்களும் 3, 5 மற்றும் 8ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கும் பொருந்தும். தமிழகத்தில் 8ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி கொள்கை தொடரும் என்றும் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: