இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்க - ராமதாஸ் வலியுறுத்தல்

கொரோனா அச்சம் நீடிக்கும் சூழலில் நடப்பாண்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டுமென்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஆண்டு நீட் தேர்வை ரத்து செய்க - ராமதாஸ் வலியுறுத்தல்
பாமக நிறுவனர் ராமதாஸ்.
  • Share this:
ஜூலை 26ம் தேதி நீட் தேர்வு நடத்த தேசிய தேர்வு முகமை ஏற்பாடு செய்து வருகிறது. இதனைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராமதாஸ், கொரோனா அச்சத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள மாணவர்களால், நீட் தேர்வு எழுத முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.

12-ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது மருத்துவக் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் குறைத்து விடாது என்று கூறியுள்ள அவர், இந்த ஆண்டு மட்டுமாவது நீட் தேர்வை மத்திய அரசே ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

முதன்மை வழக்கை விசாரிக்காமல், நீட் தேர்வை தொடர்ந்து நடத்துவது நியாயமல்ல என்று சுட்டிக்காட்டியுள்ள ராமதாஸ், நீட் தேர்வு விவகாரத்தில் பாமக விரைவில் வழக்கு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.


இன்றைய நிலையில் அமெரிக்காவை விட இந்தியாவில் தான் அதிக கொரோனா தொற்றுகள் ஏற்படுகின்றன என்றும், புதிய தொற்றுகள் எண்ணிக்கையில் மூன்றாவது பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளதையும் ராமதாஸ் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Also read... புழல் சிறையில் தொடரும் கொரோனா பாதிப்பு - மேலும் 15 பேருக்கு தொற்று உறுதி!
Also see...
First published: May 30, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading