தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற ஏக்கம் தீர்ந்தது: ராமதாஸ் சூசக ட்வீட்

ராமதாஸ்

தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் சூசகமாக ட்வீட் செய்துள்ளார்.

  • Share this:
    தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கோரிக்கைவிடுத்துவந்தார். வன்னியர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஒப்புக்கொள்ளும் கட்சிகளுடன் தான் கூட்டணி என்று தெரிவித்து வந்த அவர், பின்னர் வன்னியர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தற்போது கோரிக்கைவைத்துவருகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசுத் தரப்பில் அமைச்சர்களுடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருப்பினும், உடன்பாடு எட்டப்படாமல் இருந்துவருகிறது.

    கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்த பா.ம.க வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்யாமல் இருந்துவருகிறது. இதற்கிடையில், ட்விட்டரில் அவ்வப்போது சூசகமான ட்வீட்களை ராமதாஸ் பதிவிட்டுவருகிறார்.


    இந்தநிலையில், இன்று ‘தெருக்கூத்து பார்த்து ரொம்ப நாளாச்சு என்ற சென்னைவாசியின் நீண்டநாள் ஏக்கம் தீர்ந்தது’ என்று ட்வீட் செய்துள்ளார்.

    பெங்களூருவிலிருந்து சென்னை வந்த சசிகலா நேற்று பெரிய அளவிலான வரவேற்புகள் அளிக்கப்பட்டது. சென்னை தியாராகராய நகரில் அவரது இல்லத்துக்கு செல்லும்போது மேளங்கள் அடித்து மிகப்பெரிய அளவில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தநிலையில், ராமதாஸுன் ட்விட்டர் பதிவு கவனத்தை ஈர்த்துள்ளது.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: