எனது 41 ஆண்டுகால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனையுடன் கூறியுள்ளார்.
பா.ம.க. சிறப்பு பொதுக்குழு கூட்டம், ஆன்-லைன் மூலமாக நேற்று நடந்தது. கூட்டத்துக்கு ஜி.கே.மணி தலைமை தாங்கினார். ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழகம்-புதுச்சேரியை சேர்ந்த மாநில-மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள், பா.ம.க.வின் செயல்பாடுகள், கூட்டணி குறித்த நிலைப்பாடு, எதிர்வரும் தேர்தல் மற்றும் கூட்டணி குறித்த நிலைப்பாடு உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், “ ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவு மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. நாம் பலமான கட்சி நம்முடைய பலமெல்லாம் எங்கே போனது. எனது 41 ஆண்டு கால உழைப்புக்கு மரியாதை இல்லாமல் போய்விட்டதே. ஆதாயத்துக்காக யாரும் கட்சியில் இருக்க வேண்டாம்
கட்சியில் போட்டி, பொறாமை இருக்கக்கூடாது. திமுக, அதிமுகவுக்கு நாம் பலநேரங்களில் உதவியிருக்கிறோம். ஒரு கட்சி நம்மை களங்கப்படுத்தியது. இன்னொரு கட்சி நம்மை கொஞ்சம் கவுரப்படுத்தியது. இனி நமது தலைமையில் தான் கூட்டணி. வேறு யாருடனும் கூட்டணி இனி கிடையாது. வீடு வீடாக சென்று பா.ம.க.வின் பெருமைகளை, செயல்திட்டங்களை சொல்லுங்கள். நமது வளர்ச்சியை பற்றி மட்டுமே இனி நாம் சிந்திப்போம். மக்கள் நிச்சயம் மனம் மாறுவார்கள். மாற்றத்தை ஏற்பார்கள். என் மூச்சு உள்ளபோதே கோட்டையில் அன்புமணி ராமதாஸ் உட்கார வேண்டும்.” என்றார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Dr Ramadoss, PMK, Pmk anbumani ramadoss, TamilNadu Politics