ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு - ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

தனக்கு எதிராக திமுக தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்ய கோரி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமதாஸ் மீதான அவதூறு வழக்கு - ஆர்.எஸ்.பாரதிக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
பாமக நிறுவனர் ராமதாஸ்.
  • News18
  • Last Updated: September 10, 2020, 4:25 PM IST
  • Share this:
பஞ்சமி நிலத்தில் முரசொலி அறிக்கட்டளையின் அலுவலகம் அமைந்திருப்பதாகவும், அந்த இடத்தின் மூல பத்திரத்தை மு.க.ஸ்டாலின் வெளியிட வேண்டும் என பா.ம.க நிறுவனர் ராமதாஸ் டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

அடிப்படை ஆதாரம் இல்லாமல் திமுக மீது குற்றச்சாட்டை முன்வைத்த பாமக நிறுவனர் ராமதாசுக்கு எதிராக முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர்
ஆர்.எஸ் பாரதி எழும்பூர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.


மேலும், முரசொலி அறக்கட்டளையின் மூல பத்திரத்தை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் நீதிமன்றம், அவதூறு வழக்கில் மார்ச் 20-ம் தேதி நேரில் ஆஜராக ராமதாசுக்கு உத்தரவிட்டது.Also read... இந்தியாவில் கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துள்ளது - யுனிசெப்

இந்த வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு கோரியும், தன் மீதான வழக்கு விசாரணையை ரத்து செய்ய கோரியும் ராமதாஸ் உயர்நீதிமன்றம் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ராமதாஸ் வழக்கில் நேரில் ஆஜராவதில் இருந்து விளக்களித்தும், மறு உத்தரவு வரும் வரை அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது முரசொலி அறக்கட்டளை சார்பில் யாரும் ஆஜராகாததால், அவர்கள் தரப்புக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்ப அறிவுறுத்திய நீதிபதி, விசாரணையை அக்டோபர் 5-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
First published: September 10, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading