ஏலகிரி, ஜவ்வாது மலைகளை திமுக சூறையாடிவிடும் - ராமதாஸ்

ஏலகிரி, ஜவ்வாது மலைகளை திமுக சூறையாடிவிடும் - ராமதாஸ்

பிரச்சாரத்தில் ராமதாஸ்

திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக ஆட்சிக்கு வந்தால் ஏலகிரி மலையும், ஜவ்வாது மலையும் சூறையாடப்பட்டு விடும், நில அபகரிப்பு அதிகரிக்கும் என்று கூறினார்.

 • Share this:
  திருப்பத்தூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ், திமுக ஆட்சிக்கு வந்தால் ஏலகிரி மலையும், ஜவ்வாது மலையும் சூறையாடப்பட்டு விடும், நில அபகரிப்பு அதிகரிக்கும் என்று கூறினார்.

  அதிமுக கூட்டணி சார்பில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் டி.கே.ராஜாவை ஆதரித்து மருத்துவர் ராமதாஸ் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

  அப்போது அவர் பேசுகையில், “திருப்பத்தூர் தொகுதியில் வேட்பாளராக களம் காணும் டி.கே.ராஜா ஏற்கனவே 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். இந்தப் பகுதி மக்களுக்கு நன்கு அறிமுகம் ஆனவர். உதவி செய்யும் மனபாங்கு கொண்டவர். திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக சட்டப்பேரவையில் பலமுறை குரல் எழுப்பியவர். மக்களுடன் சகஜமாக பழக்கூடியவர். அவரை எளிதாக அணுகலாம். அவர் வெற்றிப்பெற்றால் இந்த தொகுதிக்கு மேலும் பல வளர்ச்சி திட்டங்களை நிச்சயமாகக் கொண்டு வருவார்.

  13 சட்டப்பேரவைத் தொகுதிகளை கொண்டிருந்தது வேலூர் மாவட்டம். ஆகவே, நிர்வாக வசதிகள் சரிவர செய்ய முடியவில்லை. எனவே, வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரிக்க வேண்டும் என பாமக சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தினோம். திருப்பத்தூரில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன. அதன் விளைவாக, கடந்த 2019 ஆம் ஆண்டு திருப்பத்தூர் மாவட்டம் உதயமானாது. புதிய மாவட்டத்தால் இந்தப் பகுதி மக்களின் பல்வேறு தேவைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு வருகிறன.

  இதற்கெல்லாம் மக்கள் நன்றிக்கடன் செலுத்த வேண்டாமா? அதை எப்படி செய்வது, அதிமுகவிற்கு இரட்டை இலை சின்னத்திலும், பாமகவுக்கு மாம்பழச் சின்னத்திலும் வாக்களிக்க வேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கை அட்சயபாத்திரம். ஆட்சிக்கு வந்ததும் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்.

  திமுக ஆட்சிக்கு வந்தால் எதுவுமே மிஞ்சாது. இங்கே இருக்கும் ஏலகிரி மலையும், ஜவ்வாதுமலையையும் திமுகவினர் சூறையாடிவிடுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிடும். நில அபகரிப்பு அதிகரிக்கும், வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள், பெண்களுக்கு பாதுகாப்பு இருக்காது.

  Must Read :  எ.வ.வேலு ரூ.25 கோடி வருவாயை மறைத்தாக வருவாய் வரித்துறை அதிகாரிகள் தகவல்

   

  ஆகவே, ஏப்ரல் 6 ஆம் தேதி வாக்காளர்கள் அதிமுக கூட்டணியை ஆதரித்து வாக்களிக்க” என்று ராமதாஸ் கூறினார்.
  Published by:Suresh V
  First published: