வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேச தமிழக அரசு அழைப்பு: ராமதாஸ் தகவல்

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேச தமிழக அரசு அழைப்பு: ராமதாஸ் தகவல்

பாமக நிறுவனர் ராமதாஸ்

ஜி.கே.மணி தலைமையில் 3 உறுப்பினர்கள் அடங்கிய குழு பேச்சுவார்த்தையில் பங்கேற்க உள்ளனர்.

 • Share this:
  தமிழ்நாட்டில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு குறித்து பேச தமிழக அரசு அழைப்பு விடுத்திருப்பதாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  அந்த பதிவில், ‘தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பேச்சு நடத்த வரும்படி தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது.

  அதையேற்று பாமக தலைவர் திரு. ஜி.கே.மணி தலைமையில் 3 உறுப்பினர்கள் அடங்கிய குழு இன்று தமிழக முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் திரு. ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது. நல்ல முடிவை எதிர்பார்ப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Suresh V
  First published:

  சிறந்த கதைகள்