நார்வே, சுவீடன் போன்று தமிழகத்தை சொர்க்கபூமியாக மாற்ற அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் - ராமதாஸ்

ராமதாஸ்

நார்வே, சுவீடன் போன்று தமிழகத்தை சொர்க்கபூமியாக மாற்ற, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாமக நிறுவனம் ராமதாஸ் கும்மிடிப்பூண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.

 • Share this:
  நார்வே, சுவீடன், பின்லாந்து போன்று தமிழகத்தை சொர்க்கபூமியாக மாற்ற, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாமக நிறுவனம் ராமதாஸ் கும்மிடிப்பூண்டி தேர்தல் பிரச்சாரத்தின் போது கூறினார்.

  அதிமுக கூட்டணியில் இடம் பிடித்துள்ள பாமக சார்பில் கும்மிடிப்பூண்டியில் பிரகாஷ் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டும் வகையில் பாமக நிறுவனர் ராமதாஸ், கும்மிடிப்பூடியில் உள்ள தண்டலம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், நார்வே, சுவீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் கல்வி, மருத்துவத்தில் சிறந்து விளங்குவதாக குறிப்பிட்டார்.

  அத்துடன், மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலிலும் இடம் பிடித்து சொர்க்க பூமியாக திகழ்கின்றன என்றார். எனவே, இதே போன்று தமிழகம் சொர்க்க பூமியமாக மாற வேண்டும் எனில், எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்தார்.

  இதனிடையை, தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் பாமக சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணிக்கு ஆதரவாக, அன்புமணி ராமதாஸ் பிரசாரம் மேற்கொண்டார். பென்னாகரத்தில் மக்கள் நலத் திட்டங்களைக் கொண்டு வர பாமகவுக்கு வாக்களியுங்கள் என்று கேட்டுக்கொண்டார்.

  Must Read : தமிழகத்தில் மின்னல் வேகத்தில் பரவும் கொரோனா... ஒரு நாள் தொற்று இரண்டாயிரத்தை நெருங்கியது

   

  அப்போது, திமுகவுக்கு வாக்களித்தால், மாநில வளர்ச்சி கேள்விக்குறியாகும் எனக் கூறிய அன்புமணி, ஸ்டாலினை விமர்சித்து பேசினார்.

  தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  Published by:Suresh V
  First published: