வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி இல்லை: அன்புமணி முதல்வர் வேட்பாளர் - ராமதாஸ் உறுதி

ராமதாஸ்

தி.மு.க, அ.தி.மு.கவுடன் வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி இல்லை என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 • Share this:
  தமிழ்நாட்டில் 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி பா.ம.க தனித்து தேர்தலைச் சந்தித்தது. ஆனால், அந்த தேர்தலில் பா.ம.க அனைத்து தொகுதியிலும் தோல்வியைத் தழுவியது. அதனையடுத்து, 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் போட்டியிட்டது பா.ம.க. அதனையடுத்து, தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலிலும் அ.தி.மு.க கூட்டணி 25 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்தநிலையில், தந்தி தொலைக்காட்சிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ் பேட்டியளித்தார்.

  அதில், பேசிய அவர், ‘பட்ஜெட்டில் மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றமளிக்கிறது. எதிர்கட்சியாக அ.தி.மு.க இன்னமும் சிறப்பாக செயல்பட வேண்டும். வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டுக்காக அரசு எத்தனைமுறை வேண்டுமானாலும் பாராட்டலாம். பா.ம.க, அ.தி.மு.க உறவு சுமூகமாக உள்ளது. எந்த விரிசலும் இல்லை. 10.5 சதவீத இடஒதுக்கீட்டால் வடதமிழகத்திலும் சில இடங்களில் பாதிப்பு இருந்தது. 10.5 சதவீத இடஒதுக்கீடு தொடர்பாக பல சாதிகளுக்கு புரிதல் இல்லை. 10.5 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக பேசும் அ.தி.மு.க தலைவர்களுக்கு சமூகநீதி குறித்த புரிதல் இல்லை.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராக உள்ளோம். உள்ளாட்சித் தேர்தலில் தற்போதைய கூட்டணியில் தொடரும். ஆட்சியைப் பிடிப்பதுதான் பா.ம.கவின் இலக்கு. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதுதான் இலக்கு. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க, அ.தி.மு.கவுடன் கூட்டணி இருக்காது. அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு மாற்றம், முன்னேற்றம், அன்புமணிதான். நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுப்போம்’ என்று தெரிவித்துள்ளார்.
  Published by:Karthick S
  First published: