நான் சொல்லிதான் கருணாநிதி மு.க.ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கினார் - ராமதாஸ்

நான் சொல்லிதான் கருணாநிதி மு.க.ஸ்டாலினுக்கு துணைமுதல்வர் பதவி வழங்கினார் - ராமதாஸ்

பிரச்சாரத்தில் ராமதாஸ்

நான் கூறிதான் மு.க.ஸ்டாலின், கருணாநிதி துணை முதல்வர் பதவி வழங்கினார் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பா.ம.க நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ‘ஆக்கும், காக்கும், அழிக்கும் மூன்று சக்திகள் தாய்க்கு உண்டு. பெண்களை, திரெளபதியை தெய்வமாக வணங்கும் நாடு இது. 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் செய்து, திகார் சிறை சென்றவர், முதலமைச்சரின் தாயார் பற்றி பேசியவர். எடப்பாடி தொகுதியில் பேசுவது எனக்கு மகிழ்ச்சி. 1974-ல் கிளைச் செயலாளராக இருந்து, படிபடியாக வளர்ந்து இப்போது அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளராக வளர்ந்தவர் எடப்பாடியார். அ.தி.மு.கவின் தேர்தல் அறிக்கை அமுதசுரபி. பா.ம.கவின் தேர்தல் அறிக்கை வளர்ச்சிக்கான ஆயுதம்.

    தி.மு.கவின் தேர்தல் அறிக்கை காப்பி. முதல்வரை எதிர்த்து நிற்பவர்கள் டெபாசிட் வாங்க மாட்டார்கள். நான் சொல்லி தான் துணை முதல்வர் பதவியை மு.க.ஸ்டாலினுக்கு கொடுத்தார் கருணாநிதி. மு.க.ஸ்டாலினே என்னிடம் வந்து நீங்கள் சொல்லிதான் என்னை துணைமுதல்வராக கருணாநிதி நியமித்ததாக கூறினார். தமிழகத்தில் பிரசாத் கிஷோர் மூளைச் சலவைச் செய்து வருகிறார். ஆண்கள் ஓட்டு குறைவு. பெண்கள் ஓட்டு அதிகம்.

    எனவே பெண்கள் நினைத்தால் வெற்றிபெற செய்யலாம். வரம் கொடுத்த சிவன் தலையில் வரம் பெற்றவன் கை வைத்து சோதிக்க முயன்றதும், விஷ்ணு மோகினி அவதராம் எடுத்துவந்து அழித்ததையும் பற்றிய சிறு கதை சொல்லினார். இதுபோலவே தி.மு.கவிற்கு வாக்களித்தால் கதை முடிந்துவிடும்’ என்று தெரிவித்தார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Karthick S
    First published: