• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 2026 தேர்தலில் 60 இடங்களை வென்றால் ஆட்சியைக் கைப்பற்றலாம் - பா.ம.க தொண்டர்களுக்கு ராமதாஸ் உத்வேகம்

2026 தேர்தலில் 60 இடங்களை வென்றால் ஆட்சியைக் கைப்பற்றலாம் - பா.ம.க தொண்டர்களுக்கு ராமதாஸ் உத்வேகம்

ராமதாஸ்

ராமதாஸ்

2026-ம் ஆண்டு சட்டபேரவை தேர்தலில் பாமக 60 இடங்கள் வென்றால் ஆட்சியை கைபற்றலாம் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

  • Share this:
    தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியுடன் இணைந்து பா.ம.க போட்டியிட்டது. இருப்பினும், இரு தேர்தல்களிலும் பா.ம.கவுக்கு பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. இந்தநிலையில், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.கவிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

    இந்தநிலையில், தமிழ்ப் படைப்பாளிகள் பேரிக்கம் சார்பில் பாடாண்தினைக் கவியரங்கம் இணையவழி மூலம் நடைபெற்றது. இதில் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், ‘10.5 சதவீத இட ஒதுக்கீட்டை நாம் மிரட்டி தான் வாங்கினோம். நம் மிரட்டலுக்கு பணிந்து தேர்தல் அறிவிப்புக்கு இரண்டு நாட்களுக்கு முன் சட்டம் கொண்டு வரப்பட்டது. 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றால் கூட்டணி வேண்டாம் என நான் கூறினேன். தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ள 10.5 சதவீத இட ஒதுக்கீடு நமக்கு போதுமானது இல்லை. 15 சதவீத இடஒதுக்கீடு பெறுவதே நமது நோக்கமாக இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    தமிழகத்தில், தமிழ் எங்கும் இல்லாத சூழல் உருவாகியுள்ளது. தமிழகத்தில் தமிழ் உள்ளது என நிரூபிப்பவர்களுக்கு நான் ஒரு லட்சம் ரூபாய் தருகிறேன். தமிழ் வளர்ச்சி, மது விலக்கிற்காக நாம் கோட்டையை கைபற்ற வேண்டும். கட்சி நிர்வாகிகள் அதற்கான வேலையை தொடங்குகள்’ என்று தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: