• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சித்தமருத்துவர் டாக்டர் சிவராஜ் சிவக்குமார் மறைவு: ராமதாஸ் இரங்கல்

சித்தமருத்துவர் டாக்டர் சிவராஜ் சிவக்குமார் மறைவு: ராமதாஸ் இரங்கல்

டாக்டர் சிவராஜ் சிவக்குமார்

டாக்டர் சிவராஜ் சிவக்குமார்

பாரம்பரிய சித்த வைத்தியர் குடும்பத்தில் பிறந்த சிவராஜ் சிவக்குமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவம் செய்து வந்தார்.

  • Share this:
    பிரபல சித்தமருத்துவர் டாக்டர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ராமதாஸ் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,“சேலத்தைச் சேர்ந்த பெயர் பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவர் சிவராஜ் சிவக்குமார் உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனடையடைந்தேன்.

    பாரம்பரிய சித்த வைத்தியர் குடும்பத்தில் பிறந்த சிவராஜ் சிவக்குமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக சித்த மருத்துவம் செய்து வந்தார். சேலத்தில் சித்த மருத்துவக் கல்லூரியைத் தொடங்கி அதிக எண்ணிக்கையில் சித்த மருத்துவர்களை உருவாக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.

    சித்த மருத்துவர் சிவராஜும், அவரது குடும்பத்தினரும் என் மீது மிகுந்த மரியாதையும், அன்பும் கொண்டவர்கள். நான் சேலம் செல்லும் போதெல்லாம் என்னை சந்தித்துப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தவர்.

    மேலும் படிக்க... பிரபல சித்த வைத்தியர் டாக்டர் சிவராஜ் சிவகுமார் காலமானார்

     

    அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Suresh V
    First published: