அதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..? ராமதாஸ் ட்வீட்டால் பரபரப்பு..

ஜெகன்மோகன் ரெட்டியை, தமிழக ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டு ராமதாஸ் பேசியிருப்பது பாமக அதிமுக கூட்டணியில் விரிசலா கேள்வி எழுந்துள்ளது.

அதிமுக - பாமக கூட்டணியில் விரிசலா..? ராமதாஸ் ட்வீட்டால் பரபரப்பு..
பாமக நிறுவனர் ராமதாஸ்
  • Share this:
தமிழக ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் பதிவிட்டுள்ள ட்வீட்டால் அரசியலில் பரபரப்பு உருவாகியுள்ளது.

நடப்பு நிகழ்வுகள் குறித்து தினமும் தனது ட்விட்டர் பக்கத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து பதிவிடும் வழக்கம். ஆனால், இன்று பதிவிட்டுள்ள ஒன்று அரசியலில் மிகவும் கவனத்திற்குரியதாக மாறியுள்ளது.

ஆந்திரத்தில் ஜெகன்ரெட்டி சொன்னதை செய்கிறார்; சொல்லாததையும் செய்கிறார். ஆனால், இங்குள்ள ஆட்சியாளர்கள் மக்களின் கோரிக்கைகள் குறித்து எதையும் சொல்ல மறுக்கிறார்கள். சொன்னாலும் அதை கண்டு கொள்வதில்லை. செய்யவும் மறுக்கிறார்கள்! 


இவ்வாறு  ராமதாஸ் தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார். 

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை, தமிழக ஆட்சியாளர்களுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது, ஏற்கெனவே அதிமுகவை நேரடியாக விமர்சிப்பதாகவே கருதப்படுகிறது.

அதிமுக உடன் கூட்டணியில் உள்ள பாமக, அரசு சார்ந்த விஷயங்களில் கோரிக்கைகளாக முதல்வருக்கு முன்வைத்து வந்தார். ஆனால் கடுமையாக விமர்சித்ததில்லை.

இந்த முறை அரசை நேரடியாகவே “கோரிக்கைகளை ஏற்க மறுப்பதாக” வே குறிப்பிட்டுள்ளார். வெளிப்படையாக இப்படி பேசியிருப்பது, கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டிருப்பதை உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

முன்னதாக, கூட்டணி  ஆட்சிக்கு வந்தால், அன்புமணி ராமதாசுக்கு துணை முதல்வர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை  பாமக கட்சியினரிடையே கோரிக்கையாக உள்ளது. இதே போல், பாஜகவும் துணை முதல்வர் கோரிக்கையை முன்வைத்து வருகிறது.

இந்நிலையில், பாமக நிறுவனரின் ட்வீட் சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.ஐபிஎல் போட்டிகள் குறித்த செய்திகளுக்கு நியூஸ்18 உடன் இணைந்திருங்கள்


First published: October 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading