வரதட்சணையை புனிதப்படுத்தும் பாடநூல்களை திரும்பப் பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வரதட்சணையால் ஏற்படும் பலன்கள் என்ற தலைப்பில் செவிலியர்களுக்கான புத்தகத்தில் இடம்பெற்றுள்ள பாடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. செவிலியர்களுக்கான சமூகவியல் புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அந்த பாடத்தில், வரதட்சணையால் பெண்கள் அனைத்து வீட்டு உபயோக பொருட்களையும் வாங்கிக் கொள்ளலாம், அழகில்லாத பெண்களும் வரதட்சணையால் திருமணம் செய்து கொள்ளலாம் என்பது உள்ளிட்ட சர்ச்சைக் கருத்துக்கள் அதில் இடம்பெற்றுள்ளன.
இது குறித்தி தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் கூறியிருப்பதாவது, செவிலியர் படிப்புக்கான Textbook of Sociology for Nurses என்ற நூலில் வரதட்சணையை புனிதப்படுத்தும் வகையிலான பல கருத்துகள் இடம் பெற்றுள்ளன. TK Indrani என்பவர் எழுதிய இந்த நூல் நாட்டின் பல செவிலியர் கல்லூரிகள் & பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வைக்கப்பட்டுள்ளது!
வரதட்சணை மூலம் கிடைக்கும் பொருட்கள் வீட்டை கட்டமைக்க உதவுகின்றன; மகனுக்கு கிடைக்கும் வரதட்சணையைக் கொண்டு மகளை திருமணம் செய்து கொடுக்க முடியும்; வரதட்சணை தான் மகளிர் கல்வியை ஊக்குவிக்கிறது என்பன போன்ற அந்த நூலில் உள்ள கருத்துகள் பிற்போக்கானவை!
அசிங்கமான பெண்களை கவர்ச்சிகரமான வரதட்சணை மூலம் அழகான பையனுக்கு திருமணம் செய்து வைக்க முடியும் என்று அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருப்பது பெண்களை பண்டமாக பார்க்கும் இழி செயலாகும். இந்தக் கருத்துக்கும் செவிலியர் கல்விக்கும் என்ன தொடர்பு? எனத் தெரியவில்லை!
வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!(4/4)@EduMinOfIndia@dpradhanbjp
வரதட்சணை ஆதரவு பிரச்சார அமைப்புகளில் கூட வைக்கத் தகுதியற்ற இந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடமாக வைத்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. அந்த நூலை செவிலியர் படிப்புக்கான பாடத்திட்டத்திலிருந்து நீக்குவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றும் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.