வெட்கமில்லை... லதா ரஜினிகாந்தை விமர்சித்த ராமதாஸ்

news18
Updated: July 11, 2018, 1:42 PM IST
வெட்கமில்லை... லதா ரஜினிகாந்தை விமர்சித்த ராமதாஸ்
பாமக நிறுவனர் ராமதாஸ், லதா ரஜினிகாந்த்
news18
Updated: July 11, 2018, 1:42 PM IST
வெட்கமில்லை...இங்கு யாருக்கும் வெட்கமில்லை என லதா ரஜினிகாந்தை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்தின் மீடியா ஒன் நிறுவனம், ஆட் பியூரோ என்ற நிறுவனத்திடம் ரூ. 10 கோடி கடன் வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில், மொத்த கடன் தொகையில் ரூ. 6.20 கோடியை திருப்பிச் செலுத்தாமல் லதா ரஜினிகாந்த் காலம் தாழ்த்துவதாக தெரிவிக்கப்பட்டது.

எனினும், ரூ. 80 லட்சம் பாக்கி மட்டுமே உள்ளதாக லதா ரஜினிகாந்த் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், கடனை திரும்பச் செலுத்த லதா ரஜினிகாந்துக்கு உச்சநீதிமன்றம் 12 வாரம் அவகாசம் கொடுத்திருந்தது.

உச்சநீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிவடைந்ததை அடுத்து நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோச்சடையான் பட விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீதான எஃப்.ஐ.ஆர். மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று பெங்களூரு நீதிமன்றத்தின் ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது. இவ்விவகாரத்தில் பெங்களூரு நீதிமன்றத்தில் லதா ரஜினிகாந்த் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, வெட்கமில்லை...இங்கு யாருக்கும் வெட்கமில்லை. கோச்சடையான் படத்திற்காக லதா ரஜினிகாந்த் வாங்கிய கடனை திருப்பி செலுத்த 2 முறை அவகாசம் அளித்தும் செலுத்தவில்லை. கடனை அடைப்பதாக கூறிவிட்டு இப்போது மறுப்பதை ஏற்கமுடியாது. இதுகுறித்த வழக்கை லதா எதிர்கொண்டு ஆகவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்