முகப்பு /செய்தி /தமிழ்நாடு / ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது... ‘சிங்களப் படை அத்துமீறல்‘ - ராமதாஸ் கண்டனம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது... ‘சிங்களப் படை அத்துமீறல்‘ - ராமதாஸ் கண்டனம்

மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்

மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு ராமதாஸ் கண்டனம்

Ramadoss : சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறை என்று கூறியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ள ராமதாஸ், “வங்கக்கடலில் கோடியக்கரைக்கும் தலைமன்னாருக்கும் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் விசைப்படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது கடந்த 3 வாரங்களில் இது நான்காவது முறையாகும். இவர்களையும் சேர்த்து மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களப் படையினரின் இந்த தொடர் அத்துமீறலை இந்தியா இனியும் சகித்துக் கொண்டிருக்கக் கூடாது.

Must Read : முதல் முறையாக விமானத்தில் பறக்கிறோம்.. ஈஷா யோகா மையத்திற்கு நன்றி தெரிவித்த பழங்குடியின மக்கள்

கைது செய்யப்பட்ட மீனவர்களில் இதுவரை விடுதலை செய்யப்பட்ட 12 பேர் தவிர மீதமுள்ள மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் விடுவிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

First published:

Tags: Arrested, Dr Ramadoss, Fishermen, PMK, Sri Lanka