83-வது பிறந்தநாளை கொண்டாடும் டாக்டர் ராமதாஸ் - பிரதமர் மோடி போனில் அழைத்து வாழ்த்து

மோடி வாழ்த்து

ராமதாஸின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

 • Share this:
  பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். 

  பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 83ஆவது பிறந்தநாளையொட்டி, இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ராமதாஸின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.

  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று காலை மருத்துவர் ராமதாஸை தொலைபேசி  மூலம் தொடர்பு கொண்டு 83-ஆவது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட மருத்துவர் ராமதாஸ்,‘‘உங்கள் தந்தை கலைஞர் என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். மருத்துவர் அய்யாவை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின்  நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்’’என்று வாழ்த்தினார். டாக்டர் ராமதாஸுக்கு தமிழக முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Ramprasath H
  First published: