தமிழகம், புதுவையில் ரமலான் நோன்பு தொடங்கியது

சென்னை திருவல்லிக்கேணியில் அதிகாலையிலேயே ஒன்றுதிரண்ட இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்கி, இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

தமிழகம், புதுவையில் ரமலான் நோன்பு தொடங்கியது
சென்னை திருவல்லிக்கேணியில் அதிகாலையிலேயே ஒன்றுதிரண்ட இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்கி, இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.
  • News18
  • Last Updated: May 7, 2019, 8:18 PM IST
  • Share this:
தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடங்கியதையடுத்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

இஸ்லாம் மார்க்கத்தின் ஐந்து கடமைகளில் 3-வது கடமையாக ரமலான் நோன்பு கடைபிடிக்கப்படுகிறது. மேலும், ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம், நன்மைகளை அதிகம் செய்யும் மாதம், கடவுளை நெருங்கும் வாய்ப்பைப் பெறும் மாதம் என நம்மப்படுகிறது.

இதையொட்டி 30 நாட்களும் நோன்பு கடைபிடிக்கப்படுவதுடன், நாள்தோறும் 5 வேளை தொழுகையில் ஈடுபடுவது வழக்கம். நேற்று பிறை தெரிந்ததை அடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ரமலான் நோன்பு இன்று தொடங்குவதாக அரசு தலைமை காஜி அறிவித்தார்.


இதையடுத்து, நேற்று இரவு திராவிஹ் தொழுகையில் தொடங்கி, இன்று அதிகாலையில் சஹர் செய்தனர். இதன் ஒருபகுதியாக, சென்னை திருவல்லிக்கேணியில் அதிகாலையிலேயே ஒன்று திரண்ட இஸ்லாமியர்கள் நோன்பு தொடங்கி, இறை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Also see... உஷார்... தங்கநகைகளுக்கு வட்டியில்லா கடன்  வழங்குவதாக மோசடி
Also see... நோன்பு காலத்தில் கடைபிடிக்க வேண்டிய உணவுமுறைகள் என்னென்ன? 

Also see... 
தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: May 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading