சென்னையில் பிறை காணப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, இன்றிரவு சிறப்பு தொழுகை தமிழக மசூதிகளில் நடைபெற்று வருகின்றன.
இது தொடர்பாக தமிழக அரசின் தலைமை காஜி சலாகுதீன் முகம்மது அயூப் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-
ஹிஜ்ரி 1443 ஷாபான் மாதம் 29-ம்தேதி சனிக்கிழமை ஆங்கில மாதம் 02-04-2022 அன்று மாலை ரமலான் மாத பிறை சென்னையில் காணப்பட்டது.
ஆகையால் ஞாயிற்றுக் கிழமை ஆங்கில மாதம் 03-04-2022ம் தேதி அன்று ரமலான் மாத முதல்பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயக்கப்பட்டிருக்கிறது. என்று கூறப்பட்டுள்ளது.
சென்னையைப் போன்று தமிழகத்தின் மற்ற சில இடங்களிலும் இன்று மாலையில் பிறை தென்பட்டுள்ளது.
ஒவ்வொரு இஸ்லாமிய ஆண்டின்போதும் ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பை கடைபிடித்து வருகின்றனர். கொள்கை, தொழுகை ஆகிய இரு பெரும் கடமைகளை அடுத்து 3வது கடைபிடிக்கப்படும் கடமையாக நோன்பு உள்ளது.
இதையும் படிங்க - சென்னையில் திடீரென சீமான் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!
ரமலான் மாதத்தில்தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன், இறைவனிடம் இருந்து அவரது தூதர் முகம்மது நபிக்கு, வானவர் ஜிப்ரீல் மூலம் முதன்முறையாக அருளப்பட்டது. இதன் காரணமாக ரமலான் புனித மாதமாக முஸ்லிம்களால் கருதப்படுகிறது.
ஆங்கில ஆண்டுடன் ஒப்பிடும்போது இஸ்லாமிய ஆண்டு ஒவ்வொரு முறையும் 11 நாட்கள் குறையும். கடந்த 2021-ல் ஏப்ரல் மாதம் 13-ம்தேதி ரமலான் தொடங்கிய நிலையில், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் ரமலான் நோன்பு இன்று தொடங்கியது.
தற்போது தமிழகத்தில் இன்று பிறை தென்பட்டதை தொடர்ந்து நாளை நோன்பு கடைபிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Ramzan