நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடக்கம்!

கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், இஸ்லாமியர்கள் வீடுகளிலிருந்தபடியே நோன்பைக் கடைபிடிக்க உள்ளனர்.

நாளை முதல் தமிழகத்தில் ரமலான் நோன்பு தொடக்கம்!
கோப்புப்படம்
  • Share this:
தமிழகத்தில் ரமலான் நோன்பு, சனிக்கிழமை தொடங்கும் என்று தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மது அய்யூப் அறிவித்துள்ளார்.

ரமலான் மாதத்தில் நோன்பு இருப்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றாக உள்ளது. இந்த ஆண்டுக்கான ரமலான் நோன்பு, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இந்நிலையில், தமிழகத்தில் வெள்ளிக்கிழமை மாலை பிறை தெரிந்ததாக தமிழக அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் முஹம்மது அயூப் அறிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் ரமலான் நோன்பு, சனிக்கிழமை தொடங்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மசூதிகளில் தொழுகை நடத்த வேண்டாம் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனால், இஸ்லாமியர்கள் வீடுகளிலிருந்தபடியே நோன்பைக் கடைபிடிக்க உள்ளனர்.


Also see:
First published: April 24, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading