ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்..

மாநிலங்களவைத் தேர்தல்: திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்..

திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்..

திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்களின் சொத்து விவரங்கள்..

காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட ரூ.135 கோடி அசையும் சொத்துகள் உள்ளன.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தனது பிரமாணப் பத்திரத்தில் ப.சிதம்பரம், 135 கோடி ரூபாய் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகவுள்ள 6 பேரின் சொத்து விவரங்களை தற்போது பார்க்கலாம்.

தஞ்சையைச் சேர்ந்த திமுக வேட்பாளர் எஸ்.கல்யாணசுந்தரத்தின் சொத்து மதிப்பை பொறுத்தவரை, அவர் பெயரில் ரூ.43.46 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் அவரது இரு மனைவியர் பெயரில் 113 சவரன் தங்க, வைர நகைகள் உள்பட ரூ.67 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன. மேலும் கல்யாண சுந்தரம் பெயரில் ரூ.3.46 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள், மனைவிகள் பெயரில் ரூ.1.39 கோடி மதிப்புள்ள அசையாச்சொத்துக்கள் உள்ளன.

மேலும் கல்யாணசுந்தரம் பெயரில் ரூ.4.5 லட்சம் ரொக்கமும், மனைவிகள் பெயரில் ரூ.20.76 லட்சம் கடனும் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

திமுக வேட்பாளர் கிரிராஜனை பொறுத்தவரை, அவரது பெயரில் ரூ.1.53 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்கள் ரூ.5.12 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள், மனைவி பெயரில் ரூ.1.4 கோடி மதிப்பு அசையும் சொத்துக்கள், ரூ.39.47 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளன. கிரிராஜனுக்கு ரூ.3.17 கோடி கடனும், மனைவி பெயரில் ரூ.2.87 கோடி கடனும் உள்ளதாக கூறியுள்ளார்.

கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரை பொறுத்தவரை, அவரது பெயரில் ரூ.17.15 லட்சம் அசையும் சொத்துக்கள், ரூ.78.8 லட்சம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. மனைவி பெயரில் ரூ.27 லட்சத்திற்கு அசையும் சொத்துகள், ரூ.47 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட ரூ.135 கோடி அசையும் சொத்துகள் உள்ளன என்றும் பரம்பரை சொத்து உட்பட ரூ.5.83 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் ரூ.76.46 லட்சம் கடன் உள்ளதாகவும், அவரது மனைவி பெயரில் 1457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட ரூ.17.39 கோடி அசையும் சொத்து, ரூ.26.53 கோடி மதிப்பு அசையா சொத்து உள்ளதாகவும் ரூ.5 கோடி கடன் இருப்பதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்துக்கு ரூ.8.76 லட்சம் அசையும் சொத்து, ரூ.18.45 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் ரூ.27.22 லட்சம் அசையும் சொத்து, ரூ.2.10 கோடி மதிப்பு அசையா சொத்து மற்றும் தாயார் பெயரில் ரூ.61.84 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக வேட்பாளர் தர்மர் பெயரில், ரூ.14.49 லட்சம் மதிப்பு அசையும் சொத்து, ரூ.62.37 லட்சம் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் ரூ.17 லட்சம் அசையா சொத்து, மகள்கள் பெயரில் ரூ.36 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: ADMK, Congress, DMK, P.chidambaram