• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • அதிமுகவின் மூன்று இடங்களையும் கைப்பற்றுகிறது திமுக.... எப்படி தெரியுமா?

அதிமுகவின் மூன்று இடங்களையும் கைப்பற்றுகிறது திமுக.... எப்படி தெரியுமா?

மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்

அ.தி.மு.க. தரப்பில் போதிய எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பதால் அவர்கள் தரப்பில் வேட்பாளரை தாக்கல் செய்ய வாய்ப்பு மிகமிகக் குறைவுதான்.

  • Share this:
தமிழகத்தில் வாக்குப்பதிவு இல்லாமல் மாநிலங்களவை உறுப்பினர் தேர்வு செய்யப்படுகிறார். இந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை தி.மு.க எளிதாக கைப்பற்றும்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முகமது ஜானின் (அ.தி.மு.க) பதவி காலம் 2025ம் ஆண்டு ஜூலை 24 தேதியுடன் முடிகிறது. ஆனால் அவர் கடந்த மார்ச் 23ம் தேதி மரணமடைந்தார். எனவே அது காலியிடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க.வைச் சேர்ந்த வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோர் கடந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.யாக தேர்ந்தெடுக்கப்பட்டதால், அவர்கள் வகித்து வந்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துவிட்டனர்.

வைத்திலிங்கத்தின் எம்.பி. பதவி காலம் 2022ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ந் தேதி முடிவடைவதாக இருந்தது. கே.பி.முனுசாமியின் பதவி காலம் 2026ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி முடிவதாக இருந்தது. அவர்கள் ராஜினாமா செய்துவிட்டதால் இந்த 2 இடங்களும் தற்போது காலியிடங்களாக உள்ளன.

Also Read:  மலையாள தாலிபான்கள் – சந்தேகத்தை கிளப்பும் கேரள காங்கிரஸ் எம்.பி சசிதரூர்!

இந்த நிலையில் முகமது ஜான் மறைவால் ஏற்பட்ட காலியிடத்தை மட்டும் நிரப்புவதற்கான இடைத் தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. அதன்படி, வாக்குப்பதிவு  அடுத்தமாதம் செப்டம்பர் 13ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழக சட்டசபையில் காலி இடம் இல்லை. 234 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

ஒரு எம்.பி. காலியிடத்திற்கான இடைத் தேர்தல் என்பதால், எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் பாதி எண்ணிக்கைக்கு (117) ஒன்று கூடுதலாக, அதாவது 118 எம்.எல்.ஏ.க்களின் வாக்கை வேட்பாளர் பெற வேண்டும். அவரே வெற்றி பெறுவார்.

Also Read:   நீரஜ் சோப்ரா மருத்துவமனையில் அனுமதி: வரவேற்பு ஊர்வலத்திலிருந்து பாதியில் வெளியேறினார்!

அந்த வகையில் தி.மு.க வசம் தற்போது தனியாக 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்தால் காங்கிரஸ்-18, விடுதலைச் சிறுத்தைகள்-4, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலா -2 என 159 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.அ.தி.மு.க.விற்கு 66 எம்.எல்.ஏ.க்களும், கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.-5, பா.ஜ.க.-4 என 75 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய 118 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு போதும் என்பதால், தி.மு.க. கூடுதல் வலிமையுடன் களம் இறங்குகிறது. அ.தி.மு.க. தரப்பில் போதிய எண்ணிக்கையில் எம்.எல்.ஏ.க்கள் இல்லை என்பதால் அவர்கள் தரப்பில் வேட்பாளரை தாக்கல் செய்ய வாய்ப்பு மிகமிகக் குறைவுதான்.

Also Read:  ஆண் குழந்தைக்காக 8 முறை கருக்கலைப்பு, 1500 ஸ்டீராய்ட் ஊசிகள் – கொடூர கணவரிடம் பட்ட அவஸ்தைகள்!

எனவே தி.மு.க.வோ அல்லது கூட்டணிக் கட்சி தரப்பிலோ வேட்பாளர் நிறுத்தப்படுவார். அவரை எதிர்த்து வேட்புமனுக்களை வேறு கட்சியினர் தாக்கல் செய்ய வாய்ப்பு இல்லை. இதனால் தி.மு.க.வின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.4 ஆண்டுகளுக்கு பதவி ஒரு வேட்பாளரை முன்மொழிவதற்கு 10 எம்.எல்.ஏ.க்கள் கையெழுத்திட வேண்டும். எனவே சுயேட்சையாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்தாலும் எம்.எல்.ஏ.க்கள் முன்மொழிய வாய்ப்பில்லை.

எனவே இந்தத் தேர்தலில் போட்டிக்கு வாய்ப்பில்லை. அதனால் வாக்குப்பதிவும் நடைபெறாது. வாக்குப்பதிவு நடைபெறாத சூழ்நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளான செப்டம்பர் 3ம் தேதியன்றே, வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.வெற்றி பெறும் அந்த வேட்பாளர் 2025ம் ஆண்டு ஜூலை 24ம் தேதிவரை மாநிலங்களவை உறுப்பினராக பதவி வகிப்பார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதேபோல் மற்ற இரண்டு இடங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடைபெறும் என்பதால் அந்த இடங்களையும் திமுக எளிதாக கைப்பற்றும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: