ஒருவேளை வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால்...? திமுக சார்பில் என்.ஆர் இளங்கோ வேட்புமனு தாக்கல்!

வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், என்.ஆர் இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்வார். 

news18
Updated: July 8, 2019, 10:38 AM IST
ஒருவேளை வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால்...? திமுக சார்பில் என்.ஆர் இளங்கோ வேட்புமனு தாக்கல்!
வேட்புமனு தாக்கல் செய்த வைகோ
news18
Updated: July 8, 2019, 10:38 AM IST
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வைகோவின் வேட்புமனு ஒருவேளை நிராகரிக்கப்பட்டால், அதற்கு பதிலாக திமுக சார்பில் போட்டியிட என்.ஆர் இளங்கோ இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, திமுக வேட்பாளர்கள் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவர் நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

6 இடங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் ஆகிய 2 பேர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

இதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு வருகிற 11-ம் தேதி கடைசி நாளாகும் என்ற நிலையில், இந்த 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், வைகோவுக்கு தேசத்துரோக வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. மேல்முறையீடு செய்யப்போவதாக வைகோ மனுத்தாக்கல் செய்ததை அடுத்து, அவரது தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனால், அவரது வேட்புமனு பரிசீலனையின் போது சட்ட சிக்கல்கள் எழ வாய்ப்பு உள்ளது. ஒருவேளை வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால், அவருக்கு பதிலாக திமுகவின் என்.ஆர் இளங்கோ போட்டியிட இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

வைகோவின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டால், என்.ஆர் இளங்கோ தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றுக்கொள்வார்.

வைகோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டாலும், அந்த இடத்தில் மதிமுகவுக்கே திமுக வாய்ப்பளித்திருக்க வேண்டும். மாற்றாக ஒப்பந்தத்தை மீறும் வகையில் திமுக வேட்பாளரை நிறுத்துவது சரியா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

First published: July 8, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...