மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவிக்கிறது!

அதிமுக கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஒரு இடத்தை பாமகவிற்கு கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக இன்று அறிவிக்கிறது!
ராஜ்யசபா
  • News18
  • Last Updated: July 6, 2019, 7:32 AM IST
  • Share this:
மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வில்சன், சண்முகம் ஆகியோரும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் இன்று வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர்.

தமிழகத்தில் வரும் 18-ம் தேதி மாநிலங்களவையில் காலியாகப் போகும் 6 இடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் திமுக, அதிமுகவிற்கு தலா 3 இடங்கள் கிடைக்கும்.

இதில் திமுக சார்பில், வழக்கறிஞர் வில்சன், தொமுச செயலாளர் சண்முகம் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வைகோவும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்ய உள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம்


இந்த நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட உள்ளனர். அதிமுக கூட்டணி ஒப்பந்தத்தின்படி ஒரு இடத்தை பாமகவிற்கு கொடுக்கும். மீதமுள்ள இரு இடங்களில் அந்தக் கட்சி சார்பில் யார் போட்டியிட உள்ளார்கள் என்ற அறிவிப்பை, இன்று காலை 10.30 மணிக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட உள்ளனர்.

மேலும் படிக்க.... திருத்தணி அருகே டிக்டாக் செயலியியால் நடந்த கொலை தற்கொலை
அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading