Home /News /tamil-nadu /

மாநிலங்களவை தேர்தல் : தமிழக வேட்பாளர்கள் 6 பேரின் சொத்து விவரங்கள்... ப.சிதம்பரம் பெயரில் ரூ.135 கோடி சொத்து

மாநிலங்களவை தேர்தல் : தமிழக வேட்பாளர்கள் 6 பேரின் சொத்து விவரங்கள்... ப.சிதம்பரம் பெயரில் ரூ.135 கோடி சொத்து

ப.சிதம்பரம்

ப.சிதம்பரம்

காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட135 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன .

    மாநிலIங்களவைத் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில் தனது பிரமாணப் பத்திரத்தில் ப.சிதம்பரம், 135 கோடி ரூபாய் அசையா சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இதுபோல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வாகவுள்ள 6 பேரின் சொத்து விவரங்களை தற்போது பார்க்கலாம்.

    தஞ்சையைச் சேர்ந்த திமுக வேட்பாளர் எஸ்.கல்யாணசுந்தரத்தின் சொத்து மதிப்பை பொறுத்தவரை, அவர் பெயரில் 43 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் அவரது இரு மனைவியர் பெயரில் 113 சவரன் தங்க, வைர நகைகள் உள்பட 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துகளும் உள்ளன, மேலும் கல்யாண சுந்தரம் பெயரில் 3 கோடியே 46 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள், மனைவிகள் பெயரில் 1.39 கோடி மதிப்புள்ள அசையாச்சொத்துக்கள் உள்ளதாகவும், மேலும் கல்யாணசுந்தரம் பெயரில் 4.5 லட்சம் ரொக்கமும், மனைவிகள் பெயரில் 20 லட்சத்து 76 ஆயிரம் கடனும் இருப்பதாகவும் பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டுள்ளது.

    திமுக வேட்பாளர் கிரிராஜனை பொறுத்தவரை, அவரது பெயரில் 1.53 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் 5 கோடியே 12 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள், மனைவி பெயரில் 1 கோடியே 4 லட்சம் மதிப்பு அசையும் சொத்துக்கள் 39.47 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளன. கிரிராஜனுக்கு 3.17 கோடி ரூபாய் கடனும், மனைவி பெயரில் 2.87 கோடி ரூபாய் கடனும் உள்ளதாக கூறியுள்ளார்.

    Also Read : இரட்டை வேடம் போடும் பாஜக.. பொன்னையன் பேச்சால் அதிமுக கூட்டணியில் சலசலப்பு

    கே.ஆர்.என்.ராஜேஷ்குமாரை பொறுத்தவரை, அவரது பெயரில் 17.15 லட்சம் ரூபாய் அசையும் சொத்துக்கள், 78 லட்சத்து 8 ஆயிரம் மதிப்பிலான அசையா சொத்துக்கள் உள்ளன. மனைவி பெயரில் 27 லட்சம் ரூபாய் அசையும் சொத்துகள், 47 லட்சம் மதிப்பு அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்தின் பெயரில் 32 கிராம் தங்கம், 3.25 கேரட் வைரம் உட்பட135 கோடி ரூபாய் அசையும் சொத்துகள் உள்ளன என்றும் பரம்பரை சொத்து உட்பட 5.83 கோடி மதிப்பு அசையா சொத்துக்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    மேலும் 76 லட்சத்து 46 ஆயிரம் கடன் உள்ளதாகவும், அவரது மனைவி பெயரில் 1457 கிராம் தங்கம், 76.71 கேரட் வைரம் உட்பட 17.39 கோடி ரூபாய் அசையும் சொத்து, 26.53 கோடி மதிப்பு அசையா சொத்து உள்ளதாகவும் 5 கோடி ரூபாய் கடன் இருப்பதாகவும் ப.சிதம்பரம் குறிப்பிடப்பட்டுள்ளார்.

    அதிமுக வேட்பாளர் சி.வி.சண்முகத்துக்கு 8.76 லட்ச ரூபாய் அசையும் சொத்து, 18.45 லட்சம் ரூபாய் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் 27.22 லட்ச ரூபாய் அசையும் சொத்து, 2.10 கோடி ரூபாய் மதிப்பு அசையா சொத்து மற்றும் தாயார் பெயரில் 61.84 லட்சம் மதிப்பிலான அசையும் சொத்து உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    அதிமுக வேட்பாளர் தர்மர் பெயரில், 14.49 லட்சம் ரூபாய் மதிப்பு அசையும் சொத்து, 62.37 லட்சம் ரூபாய் மதிப்பு அசையா சொத்து, மனைவி பெயரில் 17 லட்ச ரூபாய் அசையா சொத்து, மகள்கள் பெயரில் 36 லட்சம் ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்து இருப்பதாகவும் பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Parliament, Rajya Sabha, Rajya Sabha Election

    அடுத்த செய்தி