மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!

வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு வருகிற 11-ம் தேதி கடைசி நாளாகும் என்ற நிலையில், இந்த 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாநிலங்களவை தேர்தலில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!
மக்களவை
  • News18
  • Last Updated: July 8, 2019, 8:35 AM IST
  • Share this:
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் 2 பேர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர். அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாசும் இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்கிறார்.

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு காலியாகும் 6 இடங்களுக்கான தேர்தல் வருகிற 18-ம் தேதி நடைபெற உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் தற்போது உள்ள உறுப்பினர்களின் அடிப்படையில், திமுக மற்றும் அதிமுக தலா 3 உறுப்பினர்களை தேர்வு செய்ய முடியும்.

அதன்படி, திமுக வேட்பாளர்கள் சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகிய இருவர் நேற்று முன்தினம் வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.


வேட்புமனுத் தாக்கல் செய்த வைகோ


6 இடங்களுக்கு வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்ற நிலையில், அதிமுக வேட்பாளர்கள் முகமது ஜான், சந்திரசேகரன் ஆகிய 2 பேர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் இருவரும் சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசனிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.இதைத் தொடர்ந்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசும் வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.

வேட்பு மனுவை திரும்ப பெறுவதற்கு வருகிற 11-ம் தேதி கடைசி நாளாகும் என்ற நிலையில், இந்த 6 பேரும் போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also see... கணவரை காணவில்லை: விளம்பரத்தால் சிக்கிய பாபநாசம் பட நடிகை

அரசியல், சினிமா, வைரல், செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 8, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading