மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும்
திமுக வேட்பாளர்கள் மூன்று பேர், இன்று முதலமைச்சர்
ஸ்டாலின் முன்னிலையில் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்ய உள்ளனர்.
கோவை, திண்டுக்கல், சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வுமையம் கூறியுள்ளது.
நேற்று சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியுடன் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ,பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தேசிய கல்விக் கொள்கையால் தமிழக மாணவர்கள் பயனடைவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டு மீனவர்களின் நலனுக்காக கச்சத்தீவை மீட்பதற்கு இதுவே சரியான தருணம் என பிரதமர் நரேந்திர மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை - தேனி இடையிலான விரைவு ரயில் சேவை 12 ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் தொடங்கப்பட்டது.
சென்னையில் வரும் 28ம் தேதி பாமகவின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே. மணி அறிவித்துள்ளார்.
மேட்டூர் அணையை தொடர்ந்து திருச்சி மாவட்டத்தில் உள்ள கல்லணையில் இருந்தும் முன்கூட்டியே இன்று தண்ணீர் திறந்துவிடப்பட உள்ளதால் டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சை அருகே சிமெண்ட் சாலை அமைப்பதாக கூறி, சிறுக, சிறுக 1,20,000 ரூபாயை, அரசு அதிகாரிகள் சுருட்டியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் அருகே கோயில் கும்பாபிஷேக விழா நடத்துவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில், இருதரப்பினர் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி வ,உ.சிதம்பரனார் துறைமுகத்தில் முதல்முறையாக, 292 மீட்டர் நீளம், 45.5 மீட்டர் அகலம் கொண்ட மிகப்பெரிய சரக்கு கப்பல் கையாளப்பட்டது.
தனியார் துறைமுகத்துக்கு எதிராக திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே மீனவர்கள் நான்கு நாட்களாக நடத்தி வந்த போராட்டம் ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு கைவிடப்பட்டது.
மேற்கு வங்காளத்தில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களின் வேந்தராக முதல்வரை நியமிக்கும் சட்டத்திற்கு மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
விசா வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தை மே 30ஆம் தேதி வரை கைது செய்ய தடை விதித்து டெல்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா மாநிலத்தில் குடும்ப கட்சியின் ஆட்சி முடிந்து, பாஜக ஆட்சி அமையும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
திருப்பதி திருமலையில் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசைக்கட்டி நின்ற மக்கள், சுமார் 20 மணி நேர காத்திருப்புக்குப்பின் ஏழுமலையானை தரிசித்துச் சென்றனர்.
ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில், கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
புதுச்சேரி பெரிய மார்க்கெட் பகுதியில் செயல்படும் பழக்கடைகளில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைக்கப்பட்ட ஒரு டன் மாம்பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம், இலங்கையில் நடந்த கலவரம் தொடர்பாக சிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண உதவுமாறு சர்வதேச நாடுகளிடம் அதிபர் கோத்தபய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சீனாவில் கரை ஒதுங்கிய 62 அடி திமிங்கலத்தினை மீனவ மக்கள் போராடி மீண்டும் கடலுக்குள் அனுப்பினர்.
நேபாளத்தைச் சேர்ந்த 17வயதான டோர் பகதூர் கபாங்கி உலகின் மிக குள்ளமான நபர் என்ற உலக சாதனைக்குச் சொந்தக்காரராகி இருக்கிறார்.
Must Read : சிறுமியை ஆசை வார்த்தைக் கூறி திருமணம் செய்த இளைஞர்... போக்சோவில் கைது
11வது ஆசிய ஆக்கி போட்டியில் இந்தோனேசியாவை இந்தியா வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது.
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொட்ரில் நட்சத்திர வீரரான ரபேல் நடால் மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
செஸபிள் மாஸ்டர் தொடர் இறுதி ஆட்டத்தில் சீன வீரரிடம் தமிழக வீரர் பிரக்ஞானந்தா பின்னடைவை சந்தித்தார்.
நடப்பாண்டில் ஐபிஎல் போட்டியின் இறுதிப்போட்டிக்கு செல்லும் இரண்டாவது அணியை தீர்மானிக்கும் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பெங்களூரு மோதவுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.