முகப்பு /செய்தி /தமிழ்நாடு / நடிகர் சூர்யாவிற்கு அகில இந்திய அளவில் க்ஷத்ரியர்கள் எதிர்ப்பு - ராஜ்புத் கர்னி சேனா எச்சரிக்கை

நடிகர் சூர்யாவிற்கு அகில இந்திய அளவில் க்ஷத்ரியர்கள் எதிர்ப்பு - ராஜ்புத் கர்னி சேனா எச்சரிக்கை

Jaibhim Surya

Jaibhim Surya

25 கோடி க்ஷத்ரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக தயாரிப்பாளர் சூர்யாவும் படக்குழுவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்புத் கர்னி சேனா வலியுறுத்தியுள்ளது.

  • Last Updated :

ஜெய்பீம் திரைப்படம், வன்னிய குல க்ஷத்ரியர்களை இழிவுபடுத்துவதாக அச்சமூகத்தினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதுதொடர்பாக வன்னியர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காவல் நிலையங்களில் புகார் கொடுப்பதுடன், ஆர்ப்பாட்டங்களும் செய்து வருகின்றனர். பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், இந்திய அளவில் புகழ்பெற்ற க்ஷத்ரிய சங்கங்களில் ஒன்றான ஸ்ரீ ராஜ் புத் கர்னி சேனாவும் நடிகர் சூர்யாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் மகிபால் சிங் மகராணா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அவரது அறிக்கையும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

mahipal singh

இதில், ஜெய்பீம் படத்தில் க்ஷத்திரியர்களை மோசமாக சித்தரித்ததற்காக நடிகர் சூர்யாவுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் படக்குழுவினர் க்ஷத்ரியனை வில்லனாக சித்தரித்துள்ளனர். உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம் என்றும், ஹீரோ மற்றும் பாதிக்கப்பட்டவர் மற்றும் போலீஸ் ஐஜி கதாபாத்திரங்களுக்கு அசல் பெயரை வைத்துள்ளதாகவும், ஆனால் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் டி.ஜே.ஞானவேல் ஆகியோர் சப்-இன்ஸ்பெக்டராக இருக்கும் வில்லன் கதாபாத்திரத்தின் பெயரை மாற்றியுள்ளனர்.

ராஜ்புத் கர்னி சேனா அறிக்கை

குருமூர்த்தியின் இயற்பெயர் அந்தோணிசாமி (கிறிஸ்துவன்). அவரது திரைப் பெயர் குருமூர்த்தி என்று வைக்கப்படுவதால், அவர் பிரபலமான க்ஷத்திரியத் தலைவரான குரு என்று அழைக்கப்படுகிறார். மேலும் மற்றொரு காட்சியில், வில்லன் வீட்டில் அக்னி கலசம் நாட்காட்டியை வைத்திருந்தார், அதன் மூலம் வில்லன் அக்னிகுல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதை நேரடியாகக் குறிப்பிடுகிறார். இது 25 கோடி க்ஷத்திரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளது.

top videos

    படத்தில் தேவையில்லாமல் க்ஷத்திரிய சமுதாயத்தை இழிவுபடுத்தும் செயலை ராஜ்புத் கர்னி சேனா கடுமையாகக் கண்டிக்கிறது. மேலும் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதிக்கு நீதிக்காகப் போராடிய க்ஷத்ரியரான கோவிந்தனைப் பற்றி குறிப்பிடவில்லை. 25 கோடி க்ஷத்ரியர்களின் உணர்வுகளை புண்படுத்தியதற்காக தயாரிப்பாளர் சூர்யாவும் படக்குழுவினரும் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராஜ்புத் கர்னி சேனா வலியுறுத்தியுள்ளது.

    First published:

    Tags: Actor Surya, Jai Bhim