தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்

ராஜீவ் ரஞ்சன்

தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 • Share this:
  தமிழகத்தின் தற்போதைய தலைமைச் செயலாளராக இருந்துவருபவர் கே.சண்முகம். சேலம் மாவட்டத்தைச் சேரந்த அவர், கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் 29-ம் தேதி தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வென்று 1985-ம் ஆண்டு தமிழக கேடர் ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வானார். பயிற்சி சப் கலெக்டராக தஞ்சையில் பணியாற்றிய அவர், நெல்லை சேரன்மாதேவி சப் கலெக்டராகவும் பணியாற்றினார். கிரிஜா வைத்தியநாதன் ஓய்வுக்குப்பின் தலைமைச் செயலராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2020 ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைந்தது. கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காலமாக இருந்ததால் அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

  தமிழக அரசு வைத்த கோரிக்கையின் அடிப்படையில் அவரது பதவி ஓய்வு காலத்தை மத்திய அரசு இரண்டு முறை நீட்டித்தது. இந்தநிலையில் இன்றுடன் அவரது பதவி நீட்டிப்பு காலம் காலம் முடிவுக்கு வரும் நிலையில் புதிய தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை மத்திய அரசு நியமித்துள்ளது. அவர், மத்திய அரசின் மீன்வளத்துறையின் செயலாளராக இருந்த அவரை ஐந்து தினங்களுக்கு முன்னர் மத்திய அரசு பணியிலிருந்து விடுவித்தது.

  தற்போது அவர் 47-வது தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர், 1985-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பிரிவைச் சேர்ந்தவர். நாளை முதல் அவர் தலைமைச் செயலாளராக பதவியேற்கவுள்ளார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Karthick S
  First published: