பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக்கோரி ஆளுநரைக் கண்டித்து பெரியாரிய அமைப்பு ஆர்ப்பாட்டம்

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுவிக்கக்கோரி ஆளுநரைக் கண்டித்து பெரியாரிய அமைப்பு ஆர்ப்பாட்டம்

ஆளுநரை கண்டித்து தபெதிக ஆர்ப்பாட்டம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையிலுள்ள 7 பேரை விடுதலை செய்ய தாமதிப்பதாகக் கூறி ஆளுநரைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது.

 • Share this:
  முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறார். ஆளுநர் கால தாமதம் செய்யாமல் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என பல்வேறு அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

  இந்நிலையில், 7 பேரை விடுதலை செய்ய தாமதிப்பதாகக் கூறி ஆளுநரைக் கண்டித்து, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகம் முன்பு தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தியது. 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமெனவும், இல்லையெனில் வருகின்ற 30ம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் எனவும் அவ்வமைப்பினர் தெரிவித்தனர்.  அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன் பேசுகையில், ராஜீவ் கொலை வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் மூத்தவரான கே.டி.தாமஸ் அந்த தீர்ப்பு அநீதியானதை என்பதை ஒப்புக்கொண்டதாகவும், தியாகராஜன் போன்ற சிபிஐ அதிகாரிகள் வாக்குமூலத்தை சரியாக பதிவுசெய்யவில்லை என்று ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.

  மேலும், பிற நாடுகளில் எட்டு அல்லது பத்து ஆண்டுகள் ஆயுள் தண்டனை வழங்கப்படும் சூழலில் இங்கு 29 ஆண்டுகள் சித்திரவதை செய்யப்படுகிறார்கள் என்றும் காந்தி கொலையில் சம்பந்தப்பட்ட கோபால் கோட்சேவுக்கு காங்கிரஸ் அரசு 10 ஆண்டுகளில் விடுதலை தந்ததாகவும் குறிப்பிட்டார்.
  Published by:Rizwan
  First published: