• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • எழுவர் விடுதலை கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் - நளினி உயர் நீதிமன்றத்தில் மனு

எழுவர் விடுதலை கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் - நளினி உயர் நீதிமன்றத்தில் மனு

நளினி

நளினி

நளினி ஏற்கனவே தனது மகளின் திருமணத்திற்காக பரோல் கேட்டு மனு அளித்துள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுவிக்க கோரி அளித்த மனுவை, பரிசீலிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.

ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள 7 பேரை விடுதலை செய்ய கடந்த ஆண்டு செப்டம்பர் 9-ம் தேதி தமிழக அமைச்சரவை ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. ஆனால் 6 மாதங்கள் கடந்தும் இந்த பரிந்துரையை ஆளுநர் பரிசீலிக்கவில்லை.

அதனால் நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், 7 பேரையும் உடனடியாக முன் கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழக உள்துறைச் செயலாளருக்கும், முதலமைச்சருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணையை நீதிபதி சுப்பையா, நீதிபதி கிருஷ்ணன் மற்றும் ராமசாமி கொண்ட அமர்வு ஏப்ரல் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Also see... சித்திரையில் வரும் புயல் ஆபத்தானது - பாரம்பரிய கணிப்பு மூலம் மீனவர்கள் அச்சம்

Cyclone Fani | அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் மிக கனமழை - வானிலை ஆய்வு மையம்

Also see... நளினி சாகும் வரை உண்ணாவிரதம்!


Also see...




தேர்தல் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. அரசியல் செய்திகள், தேர்தல் பிரசார வீடியோக்கள், சுவாரஸ்யமான வீடியோக்கள், விவாதங்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vaijayanthi S
First published: