முதல்வகுப்பு சிறை வசதி வழங்கக்கோரி ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி மனு தாக்கல்... தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர்நீதிமன்றம்.

முதல் வகுப்பு சிறை வசதி வழங்குமாறு ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதி மனு தாக்கல் செய்ததற்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 • Share this:
  ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராபர்ட் பயஸ் தாக்கல் செய்த மனுவில், நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டு, உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாலும், கொரோனா தொற்றால் பாதிக்கும் அபாயம் இருப்பதாலும், முதுகலை பட்டதாரியான தனக்கு, முதல் வகுப்பு சிறை வசதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியுள்ளார். முதல் வகுப்பு சிறை வசதி கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு விண்ணப்பிக்கும்படி, கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, சிறை கண்காணிப்பாளர் மூலமாக உள்துறை செயலாளருக்கு விண்ணப்பித்து ஒருமாத காலமாகியும், அது பரிசீலிக்கப்படவில்லை எனவும் மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

  Also read: மார்ச் 1ம் தேதி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்து விடும் - அதிமுக எம்.பி வைத்திலிங்கம்

  இந்த மனுவை விசாரித்த நீதிபதி பிரகாஷ், புழல் சிறை கண்காணிப்பாளரை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, மனுவுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கும்படி உள்துறை செயலாளர், சிறை கண்காணிப்பாளர், சிபிஐ-க்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Rizwan
  First published: