• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • தமிழ் தேசியத்தின் நீட்சி தான் திராவிட கட்சி: சீமான் என் அன்பு அண்ணன் - தி.மு.கவில் இணைந்த ராஜீவ் காந்தி பேட்டி

தமிழ் தேசியத்தின் நீட்சி தான் திராவிட கட்சி: சீமான் என் அன்பு அண்ணன் - தி.மு.கவில் இணைந்த ராஜீவ் காந்தி பேட்டி

ராஜீவ் காந்தி

ராஜீவ் காந்தி

நாம் தமிழர் கட்சியின் இளைஞரணிச் செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி தி.மு.கவில் இணைந்தார்.

  • Share this:
    நாம் தமிழர் கட்சியில் இளைஞர் அணி செயலாளராக இருந்த ராஜீவ் காந்தி அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். அப்போது திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜீவ் காந்தி, ‘நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி செயலாளராக இருந்தேன். திமுகவில் இணைந்தால் சாதிக்கலாம் என்பதை தாண்டி, பாஜக என்கிற கட்சி சிறுபான்மயினரை மதிப்பதில்லை. ஒற்றை ஆட்சி என்கிற பாஜகவை எதிர்க்க, மாநில சுயாட்சி என்பது பேசுகிற திமுகவிற்கு வந்தேன். சீமான் என் அண்ணன்.

    அவருடன் கருத்து வேறுபாடு இல்லை. அவர் என் அண்ணன். அதில் என்றுமே மாற்றம்மில்லை. என் அன்பு அண்ணன் அவர். பாஜகவை எதிர்க்க திமுக சரியானதாக இருக்கும் என்பதால் வந்தேன் என்றார். தமிழ் தேசியத்தின் நீட்சி தான் திராவிட கட்சி என்பதால் இங்கு வந்தேன் என்றார்.


    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: