RAJIV GANDHI HOSPITAL WORKERS FIND UNKNOWN PERSONS RELATIVES WHO ARE LIVING IN STREETS SRS
ஆதரவற்றவர்களின் குடும்பங்களை கண்டுபிடித்து ஒப்படைக்கும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்களின் ஒப்பற்ற சேவை!
ஆதரவற்ற நோயாளிகளுக்கு என அண்மையில் தனி வார்டு அமைக்கப்பட்டு அவர்களுக்கான பிரத்யேக வசதிகள் அந்த வார்டில் செய்யப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.
ஆதரவற்ற நோயாளிகளுக்கு என அண்மையில் தனி வார்டு அமைக்கப்பட்டு அவர்களுக்கான பிரத்யேக வசதிகள் அந்த வார்டில் செய்யப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.
108 ஆம்புலன்ஸ் மூலமாகவும் தன்னார்வலர்கள் மூலமாகவும் சாலை ஓரத்தில் விழுந்து கிடந்தவர்கள், விபத்தில் அடிபட்டவர்வர்கள், மருத்துவ சிகிச்சை தேவைப்படுபவர்கள் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுகிறார்கள். அப்படி ஆதரவற்ற நோயாளிகளுக்கு என அண்மையில் தனி வார்டு அமைக்கப்பட்டு அவர்களுக்கான பிரத்யேக வசதிகள் அந்த வார்டில் செய்யப்பட்டு தொடர் மருத்துவ சிகிச்சை ஒவ்வொருவரின் உடல் நிலைக்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.
சில நோயாளிகள் குடும்பத்தினர் ஆதரவு இல்லாததால் வருடக்கணக்கில் மருத்துவமனை ஊழியர்களின் பராமரிப்பில் இருந்து வருகின்றனர். இவர்களை அரசு இல்லங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிலரது குடும்பங்களுக்கு அவர்கள் மருத்துவமனையில் இருப்பது தெரியாமலேயே இருந்துள்ளது. அப்படிப்பட்ட நோயாளிகளின் உறவினர்களை கண்டறியும் பணியை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை ஊழியர்கள் செய்து வருகின்றனர். அவ்வகையில், இதுவரை ஆறு பேர் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துள்ளனர். மேலும் இரண்டு பேர் இந்த வாரம் குடும்பங்களை சந்திக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் காத்திருக்கின்றன.
சாலையில் மயங்கி விழுந்திருந்த 60 வயதான பாலசுந்தரம் 108 ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். வயது மூப்பின் மறதி காரணமாக தனக்கு யாரும் இல்லை என கூறியிருந்தார். அவரை ஆதரவற்றோர் இல்லத்துக்கு அனுப்பயிருந்த போது அவரது பையிலிருந்த கிடைத்த செல்போன் எண்ணை மருத்துவமனை ஊழியர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். அதன் வழியாக அவரது குடும்பத்தினருடன் பாலசுந்தரம் இணைய உள்ளார். இதே போன்று மேலும் ஐந்து பேர் தங்கள் குடும்பங்களுடன் இணைந்துள்ளனர்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் இது குறித்து கூறுகையில், ``எங்கள் குழுவினரின் முயற்சியால் இது வரை ஆறு பேர் குடும்பங்களுடனும் மேலும் 10 பேர் ஆதரவு இல்லங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆனால் இப்போதும் தினமும் இரண்டு அல்லது மூன்று பேர் புதிதாக வார்டுக்கு வருகிறார்கள். ஒரு முதியவர் கடந்த வாரம் பல நாள் ஆறாத காயம் காரணமாக காலில் புழுக்களுடன் வந்திருந்தார். அனைவரையும் அன்புடன் கவனித்து வருகிறோம்" என்று தெரிவித்தார்.