• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • சென்னை அரசு மருத்துவமனையில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான அறுவைச் சிகிச்சை மீண்டும் தொடக்கம்

சென்னை அரசு மருத்துவமனையில் திருநங்கைகள், திருநம்பிகளுக்கான அறுவைச் சிகிச்சை மீண்டும் தொடக்கம்

Youtube Video

திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சைகள் அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

  • Share this:
    தமிழ்நாட்டில் சென்னையில் உள்ள அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுவந்தது. கொரோனா காலத்தில் இயங்காமல் இருந்த மாற்று பாலினத்தவருக்கான கிளினிக், கடந்த மாதம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. அந்த கிளினிக்கின் மூலம் தற்போது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான அறுவை சிகிச்சை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. 2018 முதல் இயங்கும் இந்த கிளினிக்கில் இதுவரை 30 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது கிளினிக் மீண்டும் தொடங்கிய பின் இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

    மார்பகங்கள் அகற்றுதல், மார்பகங்கள் பொருத்துதல், பிறப்பு உறுப்பு மாற்றி அமைத்தல் உள்ளிட்ட அனைத்து அறுவை சிகிச்சைகளும் இங்கே செய்யப்படுகின்றன. இதற்கு முன்பாக சம்பந்தப்பட்ட நபர் முழு மனதுடன் அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொள்கிறாரா என்பதை உறுதி செய்ய ஓராண்டு காலம் ஆகும்.

    ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள போகும் திருநம்பி ஒருவர் தனக்கு இந்த அறுவை சிகிச்சை மறுபிறப்பாகும் என்றார் " பெண் உடல் அமைப்புடன் அறுவை சிகிச்சை அரங்கின் உள்ளே செல்லும் நான் ஆண் உடல் அமைப்புடன் வெளியே வர போகிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    மாற்று பாலினத்தவர்களுக்கான கிளினிக்கில் அனைத்து துறை நிபுணர்கள் ஒரே இடத்தில் இருப்பதாகவும் எனவே அறுவை சிகிச்சைகள் பாதுகாப்பாக மருத்துவ கண்காணிப்பில் செய்து கொள்ளலாம் என்றும் மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் தெரிவித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Karthick S
    First published: