தமிழக சட்டப்பேரவையில் ராஜீவ் காந்தி தீ விபத்து தொடர்பாக விளக்கம் அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,105 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் மீன் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. அந்த கட்டடத்தில் மொத்தம் 99 நோயாளிகள் சிகிச்சையில் இருந்ததாகவும், தீ விபத்து ஏற்பட்டதும் நான்கு தீயணைப்பு வாகனங்கள் போராடி 3 மணி நேரத்தில் தீயை அணைத்து என்றார்.
விபத்து ஏற்பட்டதும் நேரில் செல்ல முதல்வர் அறிவுறுத்தியதாகவும், நோயாளிகள் அனைவரும் உடனடியாக வேறு கட்டிடத்திற்கு உடனடியாக மாற்றப்பட்டனர் என்றார். இந்த சம்பவத்தில் உயிர் பாதிப்பு இல்லை என்பது மன நிறைவான விஷயம் எனவும், இது தொடர்பாக ஐந்து ஆறு முறை முதலமைச்சர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார் எனவும் தெரிவித்தார்.
Also Read : அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவர் தான் ஆளுநர்: உச்சநீதிமன்றம் திட்டவட்டம்
கடந்த பத்து ஆண்டுகளாக அங்கு பராமரிப்பு எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது எனவும், மேலும் கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர். வரும் நிதியாண்டில் நரம்பியல் மற்றும் நெஞ்சகத் துறைக்கு புதிய கட்டிடம் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உருவாக்கித் தரப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.