கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன ராஜீவ்காந்தி மருத்துவமனை... நெருக்கடியில் மருத்துவப் பணி

கொரோனா ஹாட்ஸ்பாட்டாக ராஜீவ்காந்தி மருத்துவமனை மாறியதால் மருத்துவப் பணிகள் நெருக்கடியில் உள்ளது.

கொரோனா ஹாட்ஸ்பாட் ஆன ராஜீவ்காந்தி மருத்துவமனை... நெருக்கடியில் மருத்துவப் பணி
ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
  • Share this:
சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான மருத்துவப் பணியாளர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது.

ஏராளமான செவிலியர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகி இருக்கின்றனர். இதனால் செவிலியர்களுக்கு வேலைப்பளு பல மடங்கு அதிகரித்திருப்பதுடன், அவர்களுடைய பாதுகாப்பும் கேள்விக்கு உள்ளாகியிருக்கிறது.

செவிலியர்கள் தனிமைப்படுத்தி கொள்வதற்கான அளவை 21 நாட்கள் என்பதிலிருந்து ஏழு நாட்களாக குறைத்துள்ளதுடன், தங்கும் இடத்தை முழுமையாக காலி செய்து புதிய இடத்திற்கு மாற்றம் செய்து இருக்கின்றனர்.


புதிதாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் தனிமைப்படுத்தல் மையத்தில் இரண்டு செவிலியர்களுக்கு ஒரு கழிவறை மட்டுமே உள்ளது. முன்பிருந்த பல வசதிகள் தற்போது இல்லை.

செவிலியர்கள் பயணிப்பதற்கான பேருந்து வசதி குறைவாக இருப்பதால், நெருக்கடியான வகையில் பயணித்து அதனாலும் நோய் தொற்று ஏற்படுகிறது.

80 பேருக்கு இரண்டு செவிலியர்கள் என்கிற நிலைமையில் தான் தற்போது மருத்துவம் வழங்க முடிகிறது. இதனால் கொரோனா நோய்த்தடுப்பு பணி கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது.இதர மருத்துவ பணியாளர்கள் நோய் தொற்று பெற்றிருப்பதால், நல்ல உணவுப் பொருள் பழச்சாறு போன்றவற்றை உரிய கால இடைவெளியில் நோயாளர்களுக்கு வழங்குவது முன்பு போல் நடப்பது இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள்.

நரம்பியல் மருத்துவம், எலும்பு மருத்துவம் போன்று பல்வேறு சிறப்பு மருத்துவ பிரிவிலும் நோய் பரவல் இருப்பதால் பிற நோய் சிகிச்சைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மருத்துவ பணியாளர்கள் மத்தியில் நோய் பரவுவது இரண்டு விதமான சவால்களை உருவாக்கும். நோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்க முடியாது, இதர நோய் கொண்டவர்களுக்கு தொற்று நோயும் பரவி அதனால் மரணம் அதிகரிக்கும். இக்கட்டான இந்த நிலைமையை சமாளிப்பது எப்படி என்று தத்தளிக்கும் நிலையில் அரசு நிர்வாகம் இருக்கிறது.

Also read... இந்தியாவை அதிர வைத்த ஜூன் 12... கொரோனா குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்கள்
First published: June 15, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading