ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

Exclusive: ராஜீவ் கொலை வழக்கு.. விடுதலை தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது -நளினி

Exclusive: ராஜீவ் கொலை வழக்கு.. விடுதலை தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது -நளினி

நளினி

நளினி

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  ராஜிவ் காந்தி கொலை வழக்கில் இருந்து முன் விடுதலை பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், செய்யாத குற்றத்திற்காக 30 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுப்பவித்துள்ளதாகவும் நளினி தெரிவித்துள்ளார்.

  நியூஸ்18 ஊடகத்துக்கு  பிரத்யேக பேட்டியளித்துள்ள நளினி, 6 பேரும் விடுதலையாகியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.  தமிழ் மக்கள் எல்லாருக்கும் எங்கள் நன்றி. 32 வருசத்துக்கும் முன்னாடி சிறைக்கு வந்தபோதே, நாங்கள் தவறு செய்யவில்லை என்பது எங்களுக்கு தெரியும் என்பதால் தொடர்ந்து முயற்சி செய்துவந்தோம். விடுதலையாவோம் என்ற நம்பிக்கை இருந்தது.

  சத்தியம் வெல்லும், உண்மை வெல்லும் என்று நம்பினோம். 20 வயதில் சிறைக்கு வந்தோம் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார். தமிழக அரசுக்கு மிக்க நன்றி என்றும் அவர் கூறினார்.

  முன்னதாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன், தன்னை விடுவிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் கடந்த மே.18ம் தேதி தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம் , 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி அவரை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ததது குறிப்பிடத்தக்கது.

  இதையும் படிங்க: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி உட்பட 6 பேரும் விடுதலை - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

  இந்நிலையில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிசந்திரன், ஹரிகரன் ஆகியோர் தங்களை சிறையில் இருந்து விடுதலை செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.

  இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்த நிலையில் இன்று தீர்ப்பளித்தனர். அதில், பேரறிவாளன் வழக்கில் அளிக்கப்பட்டட தீர்ப்பு இந்த வழக்கில் தண்டனை பெற்ற ஆறு பேருக்கும் பொருந்தும் என்று கூறி நளினி உட்பட ஆறுபேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளனர்.

  Published by:Murugesh M
  First published:

  Tags: Nalini, Rajiv death case