கொரோனா நிவாரண நிதி: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி ரூ.5000 வழங்கல்!

கோப்புப் படம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முதலமைச்சரின்  பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்

 • Share this:
  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி முதலமைச்சரின்  பொது நிவாரண நிதிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கியுள்ளார்.

  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தங்கு தடையின்றி சிகிச்சை அளிக்கவும், ஆக்சிஜன் போன்றவை வாங்கவும்  முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியளிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

  இதையடுத்து, திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள்,  அரசியல் பிரமுகர்கள் உட்பட ஏராளமானோர் நிதி அளித்து வருகின்றனர்.  இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிக்கையில், ஒரு வாரத்தில் 69 கோடி ரூபாய்  நிதி திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  இதில் 25 கோடி ரூபாய் மருந்து வாங்கவும், 25 கோடி ரூபாய் ஆக்சிஜன் வாங்கவும் செலவிடப்படவுள்ளது.

  இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்  சிறையில் உள்ள நளினி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு  நிதி வழங்கியுள்ளார்.  ‘தனது சிறை வைப்பு நிதியில் இருந்து  5 ஆயிரம் ரூபாயை  முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க அனுமதிக்க வேண்டும்’ என நளினி சிறை அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தார்.

  இதையடுத்து அவரது கணக்கில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்பட்டு முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Murugesh M
  First published: