ஹோம் /நியூஸ் /தமிழ்நாடு /

இனி குடும்பத்தலைவியாக வாழப் போகிறேன்: விடுதலையான பின் நளினி நெகிழ்ச்சி!

இனி குடும்பத்தலைவியாக வாழப் போகிறேன்: விடுதலையான பின் நளினி நெகிழ்ச்சி!

2 ஆண்டுகளாக எங்களை மறக்காமல் இருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என நளினி கூறினார்.

2 ஆண்டுகளாக எங்களை மறக்காமல் இருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என நளினி கூறினார்.

2 ஆண்டுகளாக எங்களை மறக்காமல் இருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என நளினி கூறினார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

    குடும்பத்தலைவியாக வாழ போகிறேன் ; குழந்தை கணவர் இவர்களுக்கானது என்னுடைய வாழ்க்கை என விடுதலையான பின் நளினி தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30ஆண்டுகளுக்கு மேல் இருந்த 6 பேரை உச்சநீதிமன்றம் நேற்று விடுதலை செய்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் நளினி மற்றும் ரவிச்சந்திரன் இருவரும் தனித்தனியே உச்ச நீதிமன்றத்தில் தங்களை விடுதலை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பில், பேரறிவாளனின் நன்னடத்தை குறித்து, பரோலில் வெளிவந்தபோதும், சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடந்து கொண்டதாக மேற்கோள் காட்டியுள்ளது. தாங்களும் அதேநிலையில் உள்ளதால், தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும். மேலும் இந்த வழக்கில் தங்களை விடுதலை செய்யும் வரை தங்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.

    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர் கவாய் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் சிறையில் இருந்துவரும், 6 பேரின் நன்னடத்தை குறித்து தமிழக அரசும், மனுதாரர்கள் தரப்பிலும் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. சிறையில் இந்த 6 பேரின் நன்னடத்தையைக் கருத்தில் கொண்டு, நளினி, முருகன் உள்ளிட்ட 6 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். இந்த வழக்கில் இருந்து ஏற்கெனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளனைப் போலவே இந்த 6 பேரும் நிவாரணங்களைப் பெற தகுதியானவர்கள் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

    இதையும் படிங்க: தமிழக அரசியல் தலைமைக்கான வெற்றிடத்தை பாஜக நிரப்ப வேண்டும்: அமித்ஷா விருப்பம்!

    இந்த நிலையில் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்த ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், முருகன், சாந்தன் , ரவிச்சந்திரன், நளினி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டனர். வேலூர் பெண்கள் மத்திய சிறையில் இருந்து விடுதலையான நளினி காட்பாடி இல்லத்தில் இருந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது 32 ஆண்டுகளாக எங்களை மறக்காமல் இருந்த தமிழக மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி என்றும் நான் குடும்பத்தலைவியாக வாழ போகிறேன் குழந்தை கணவர் இவர்களுக்கானது என்னுடைய வாழ்க்கை. விடுதலைக்காக குரல் கொடுத்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என பேசினார். மேலும் நாளை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விரிவாக பேசுவதாக கூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக்கொண்டார்.

    Published by:Arunkumar A
    First published:

    Tags: Nalini, Rajiv Gandhi Murder case, Vellore