ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ஆளுநரின் முடிவைக் கோரும் உச்சநீதிமன்றம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கு: ஆளுநரின் முடிவைக் கோரும் உச்சநீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
  • News18
  • Last Updated: February 12, 2020, 9:58 AM IST
  • Share this:
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது தொடர்பாக தமிழக ஆளுநர் என்ன முடிவு எடுத்துள்ளார் என்பதை அவரிடம் பேசி கலந்தாலோசித்துத் தெரிவிக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில், பெல்ட் வெடிகுண்டு தொடர்பான சர்வதேச விசாரணை முடியும் வரை சிறை தண்டனையை நிறுத்திவைக்கக் கோரிய பேரறிவாளனின் வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தது.

அப்போது, 7 பேரையும் விடுவிக்க 2018-ஆம் ஆண்டே தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஆளுநருக்கு அனுப்பியபோதும் அவரிடம் இருந்து இதுவரை பதில் இல்லை என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.


அப்போது, ஆளுநரிடம் கேட்டு பதில் அளிக்குமாறு நீதிபதிகள் கூறினர். அதற்கு ஆளுநரிடம் எப்படி கேட்பது என தமிழக அரசின் வழக்கறிஞர் கேட்டார். அப்போது நீதிபதிகள், தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஆளுநரிடம் நீதிமன்றமா கேட்க முடியும் என்றனர். தமிழக அரசு இருவாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Also see:
First published: February 12, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்