முகப்பு /செய்தி /தமிழ்நாடு / "அந்த ஏழு பேரையும் ரிலீஸ் செஞ்சிடுங்க" : காங்கிரஸ் சுலைமான் கோரிக்கை

"அந்த ஏழு பேரையும் ரிலீஸ் செஞ்சிடுங்க" : காங்கிரஸ் சுலைமான் கோரிக்கை

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுலைமான்

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த சுலைமான்

  • News18
  • 1-MIN READ
  • Last Updated :

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க வேண்டும் என அந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி பிரமுகர் சுலைமான் கோரிக்கை விடுத்துள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தவர் சுலைமான், ஸ்ரீபெரும்புதூரில் 1991-ம் ஆண்டு மே மாதம் 1-ம் தேதி ராஜீவ் காந்தி பங்கேற்ற கூட்டத்தை ஒருங்கிணைத்தவர். குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி, பல கட்ட சிகிச்சைக்கு பின் மீண்டு வந்தவர். சம்பவம் நடந்து 27 ஆண்டுகள் ஆன போதும், அதன் தொடர்ச்சியாக பல உடல் நலக்கோளாறு சந்தித்து வரும் சுலைமானுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் கால்கள் செயலிழந்து அகற்றப்பட்டன.

71 வயதான இவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்டவர்களை இனியும் காலம் தாழ்த்தாமல் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்துகிறார். விசாரணை நடத்தப்பட்டதிலேயே பல்வேறு சர்ச்சைகள் இருப்பதாக கூறும் சுலைமான், 28 ஆண்டு காலம் சிறையில் வைத்திருந்து இனியும் விடுவிக்காமல் இருந்தது தவறு என்ற கருத்தையும் முன்வைக்கிறார்.

27 வருடங்களுக்கும் மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்துள்ளது. பல்வேறு தரப்பினர் அவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். அதேவேளையில், இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சிலரும் 7 பேரை விடுக்ககூடாது என கோரிக்கையை எழுப்பி வருகின்றனர்.

First published:

Tags: Congress leader, Perarivalan, Rajiv convicts, Rajiv death case, Sulaiman