• HOME
  • »
  • NEWS
  • »
  • tamil-nadu
  • »
  • 'அரசியல் மாற்றத்துக்கான எனது முக்கியத் திட்டங்கள் என்ன?’- ரஜினிகாந்த் பட்டியல்!

'அரசியல் மாற்றத்துக்கான எனது முக்கியத் திட்டங்கள் என்ன?’- ரஜினிகாந்த் பட்டியல்!

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

'ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது. அதேசமயம் தவறு செய்தால் சுட்டிக்காட்டித் திருத்துவோம்'.

  • News18
  • Last Updated :
  • Share this:
    ரஜினிகாந்த் தான் விரும்பும் அரசியல் மாற்றத்துக்காக தன்னிடம் உள்ள முக்கியத் திட்டங்கள் குறித்துப் பட்டியலிட்டுள்ளார்.

    ரஜினிகாந்த் தனது முக்கியத் திட்டங்கள் குறித்துக் கூறுகையில், “பதவி ஆசை இல்லாதவன் நான். ஆட்சித் தலைமை வேறாகவும் கட்சித் தலைமை வேறாகவும் இருக்க வேண்டும். அதனால், நான் வலிமையான கட்சித் தலைமைப் பொறுப்பை வகிப்பேன். எனது கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நேர்மையும் திறமையும் ஒருங்கே அமையப் பெற்ற தன்னம்பிக்கை உள்ள படித்த சுயமரியாதை கொண்ட ஒரு இளைஞரை முதல்வர் பதவியில் அமர்த்துவேன்.

    அந்த இளைஞர் ஒரு பெண்ணாகவும் இருக்கலாம். அந்த முதல்வர் தலையாட்டும் பொம்மை ஆக இருக்க மாட்டார். ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது. அதேசமயம் தவறு செய்தால் சுட்டிக்காட்டித் திருத்துவோம். கட்சிக்காரர்கள் ஆட்சியாளர்களை தொந்தரவோ அதிகாரமோ செய்யாமல் பார்த்துக்கொள்வோம்.

    இதுதான் நான் விரும்பும் மாற்று அரசியல். இந்த மாற்று அரசியலுக்கு நான் வைத்திருக்கும் முக்கியத் திட்டங்கள் இவைதான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

    மேலும் பார்க்க: எதற்காக அரசியலுக்கு வருகிறேன் எனத் தெரியுமா?- நடிகர் ரஜினிகாந்த் தன்னிலை விளக்கம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Rahini M
    First published: